பக்கம் எண் :
 
எழுத்ததிகாரம்23முத்துவீரியம்

இதுவுமது

70. 1ணனமுன் னினங் க, ச, ஞ, ப, ம, ய வவ்வரும்.

(இ-ள்.) ண, ன க்களுக்கு முன்னர்க் க, ச, ஞ, ப, ம, ய, வ இவ்வேழு மெய்யும் வந்து
மயங்கும்.

(வ-று). குண்டலம், தென்றிசை; வெண்கலம், சோறு, ஞமலி, பல், மலர், மண்யாது,
மண்வலிது, பொன்கலம், சாடி, ஞமலி, பல், மலை, யாது, வலிது. (70)

இதுவுமது

71. யகரமுந் தகரமு நகரமுன் னாகும்.

(இ-ள்.) நகரத்துக்கு முன்னர் யகரமுந் தகரமும் வந்து மயங்கும்.

(வ-று.) பொருந்யாது, சந்தம். (71)

இதுவுமது

72. 2மம்முன் ப, ய, வ மயங்கு மென்ப.

(இ-ள்.) மகரத்துக்கு முன்னர் ப, ய, வ க்கள் வந்து மயங்கும்.

(வ-று.) கம்பன், கலம்யாது, நிலம்வலிது. (72)

இதுவுமது

73 3ய, ர, ழ, முன்னர் மொழிமுதன் மெய்வரும்.

(இ-ள்.) ய, ர, ழ க்களுக்கு முன்னர்க் க, ச, த, ந, ப, ம, வ, ய, ங, ஞ க்களும் வந்து
மயங்கும்.

(வ-று.) வேய், வேர், வீழ், குறிது, சிறிது, தீது, நீண்டது, பெரிது, மலிது, வலிது,
வேய்ங்குழல் ஆர்ங்கோடு, பாழ்ங்கிணறு. (73)

இதுவுமது

74. ல, ள முன்னர்க் க, ச, ப, வ, ய வரு மென்ப.

1. நன் - எழுத்து - 59.

2 ” ” 60.

3 ” ” 61.