பொருளதிகாரம் | 236 | முத்துவீரியம் |
பிணியும் அதற்கு மருந்தும் பிறழப்
பிறழமின்னும்
பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே.
(திருக். 5)
(கு-ரை.) கண்கள் பிறழப் பிறழப்
பிணியும் மருந்தும் ஆயின என்பது கருத்து. ஏதிலார்
போலப் பொதுநோக்கு நோக்குதலால் பிணியும்,
களவு கொள்ளும் சிறுநோக்கால் மருந்தும்
ஆயின.
‘பிணிக்கு மருந்து பிறமன், அணியிழை தன்னோய்க்குத்
தானே மருந்து’ என்னும்
திருக்குறளை யுட்கொண்டது.
தெய்வத்தை மகிழ்தல்
என்பது, உட்கொண்டு நின்று,
என்பால் விருப்பமுடைய இவளைத் தந்த
தெய்வத்தையல்லது வேறொரு தெய்வத்தை விரும்பேனெனத்
தெய்வத்தை மகிழ்ந்துகூறல்.
(வ-று.)
வளைபயில் கீழ்கட
னின்றிட மேல்கடல் வானுகத்தின்
துளைவழி நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல்
லோன்கயிலைக்
கிளைவயி னீக்கியிக் கெண்டையங் கண்ணியைக்
கொண்டுதந்த
விளைவையல் லால்விய வேனய வேன்றெய்வ மிக்கனவே.
(திருக். 6)
(கு-ரை.) ‘வடகடலிட்ட ஒருநுகத்தொரு
துளை தெண்கடலிட்ட ஒருகழிசென்று
கோத்தாற்
போலவும் வெங்கதிர்க்கனலியும் தண்கதிர் மதியமும்
தம்கதி வழுவித்
தலைப்பெய்தாற் போலவும்
தலைவனும் தலைவியும் தலைப்பெய்தனர்’ என்னும்
இறையனார் களவியலுரை.
புணர்ச்சிதுணிதல்
என்பது, தெய்வத்தை மகிழாநின்றவன்,
இது நமக்குத் தெய்வப்புணர்ச்சியெனத்
தன்னகக்கண்கூறி
அவளொடு புணரத் துணியா நிற்றல்.
(வ-று.)
ஏழுடை யான்பொழில் எட்டுடை
யான்புயம் என்னைமுன்னாள்
ஊழுடை யான்புலி யூரன்ன பொன்னிவ்
வுயர்பொழில்வாய்ச்
சூழுடை யாயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே
யாழுடை யார்மணங் காணணங் காய்வந் தகப்பட்டதே.
(திருக் - 7)
(கு-ரை.) ஏழுடையான் பொழில் -
ஏழுலகங்களையும் தனக்கு உடைமையாகவும்
அடிமையாகவும்
உடையவன், புயம் எட்டுடையான்-
|