பக்கம் எண் :
 
பொருளதிகாரம்242முத்துவீரியம்

பாங்கற் கூட்டத்தின்வகை

836. நினைதலும் வினாதலு முற்ற துரைத்தலும்
     கழறன் மறுத்தலுங் கவன் றுரைத்தலும்
     வலியழி வுரைத்தலும் விதியொடு வெறுத்தலும்
     நொந்து கூறலு நோத னீங்கி
     இயலிடங் கேட்டலு மியலிடங் கூறலும்
     வற்புறுத் தலுங்குறி வழிச்சேறல் காண்டலும்
     வியந்து ரைத்தலு மெல்லிய றன்னைக்
     கண்டமை கூறலுங் கருத்துக் கேற்பச்
     செவ்வி செப்பலு மவ்விடத் தேகலும்
     ஈங்கிவை நிற்ப விடந்தலை தனக்கும்
     ஆங்கவண் மெலிதலும் பொழில்கண்டு மகிழ்தலும்
     நீங்கா மகிழ்வொடு நிலைகண்டு வியத்தலுந்
     தளர்வகன் றுரைத்தலு மொழிபெற வருந்தலுங்
     கண்புதைக்க வருந்தலு நாண்விட வருந்தலும்
     நண்பொடு சென்றுபோய் நன்மருங் கணைதலும்
     இன்றியமை யாமை யியம்பலு மாய்த்
     துய்த்தலு நின்று வருந்தலும் பிறவுந்
     துன்று பாங்கற் றுறையென மொழிப. 

(திருக்கோவையார் -உரைச் சூத்திரம்)

என்பது, பாங்கனைநினைதல், பாங்கன்வினாதல், உற்றதுரைத்தல், கழறியுரைத்தல்,
கழற்றெதிர்மறுத்தல், கவன்றுரைத்தல், வலியழி வுரைத்தல், விதியொடு வெறுத்தல்,
பாங்கனொந்துரைத்தல், இயலிடங் கேட்டல், இயலிடங் கூறல், வற்புறுத்தல்,
குறிவழிச்சேறல், குறிவழிக்காண்டல், தலைவனை வியந்துரைத்தல், கண்டமைகூறல்,
செவ்விசெப்பல், அவ்விடத்தேகல் இப்பதினெட்டுக்கிளவியும் நிற்க, இடந்தலைதனக்கும்,
மின்னிடை மெலிதல் பொழில்கண்டுமகிழ்தல், உயிரெனவியத்தல், தளர்வகன்றுரைத்தல்,
மொழிபெறவருந்தல், நாணிக்கண் புதைத்தல், கண்புதைக்க வருந்தல், நாண்விடவருந்தல்,
மருங்கணைதல், இன்றியமையாமை கூறல், ஆயத்துய்த்தல், நின்றுவருந்தல், ஆகிய முப்பதும்
பாங்கற் கூட்டமாம்.

பாங்கனை நினைதல்

என்பது, தெய்வப்புணர்ச்சியி னிறுதிக்கட்சென்றெய்துதற் கருமைநினைந்து வருந்திய
தலைமகன், அவள் கண்ணாலறியப்பட்ட