| பொருளதிகாரம் | 282 | முத்துவீரியம் |  
  
அவயவங் கூறல் 
      என்பது, இன்னுமவளை
      யிவளறிந்திலள், அறிந்தாளாயிற்றழை
      வாங்குவாளென 
      உட்கொண்டுநின்று, என்னாற்
      கருதப்பட்டாளுக்கு, அவயவமிவையெனத் தோழிக்குத் 
      தலைமகன் அவளுடைய அவயவங் கூறல். 
      (வ-று.) 
      குவவின கொங்கை குரும்பை குழல்கொன்றை
      கொவ்வைசெவ்வாய் 
      கவவின வாணகை வெண்முத்தம் கண்மலர் செங்கழுநீர் 
      தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற்
      சிற்றம் பலமனையாட் 
      குவவின நாண்மதி போன்றொளிர்
      கின்ற தொளிமுகமே. (திருக். 108) 
      கண்ணயந் துரைத்தல் 
      என்பது, அவயவங் கூறியவழிக்
      கூறியும் அமையாது, தனக்கன்று தோழியைக் 
      காட்டினமை நினைந்து, பின்னும் கண்ணயந்து கூறல். 
      (வ-று.) 
      ஈசற்கி யான்வைத்த
      அன்பின் அகன்றவன் வாங்கியவென் 
      பாசத்திற் காரென் றவன்றில்லை
      யின்னொளி போன்றவன்றோள் 
      பூசத் திருநீ றெனவெளுத் தாங்கவன் பூங்கழல்யாம் 
      பேசத் திருவார்த் தையிற்பெரு
      நீளம் பெருங்கண்களே. (திருக். 109) 
      தழையெதிர்தல் 
      என்பது, கண்ணயந் துரைப்பக்
      கேட்ட தோழி, இவ்வாறு ஏற்றலெங்குடிக் 
      கேலாவாயினும், நீ செய்தவுதவிக்கும் நின் பேரன்புக்கு
      மேலாநின்றே னெனக்கூறி, 
      தலைமகன்மாட்டுத் தழை
      யெதிர்தல். 
      (வ-று.) 
      தோலாக் கரிவென்ற தற்கும்
      துவள்விற்கும் இல்லின்றொன்மைக் 
      கேலாப் பரிசுள வேயன்றி யேலேம் இருஞ்சிலம்ப 
      மாலார்க் கரிய மலர்க்கழ லம்பல வன்மலையில் 
      கோலாப் பிரசமன் னாட்கைய நீதந்த கொய்தழையே.
      (திருக். 110) 
			
				
				 |