பக்கம் எண் :
 
பொருளதிகாரம்295முத்துவீரியம்

தினையொடுவெறுத்து வரைவுகடாதல்

என்பது, பகல்வரல் விலக்கி வரைவுகடாய தோழி, இத்தினைக் காவல் தலைக்கீடாக
நாமவனை யெதிர்ப்படலா மென்று நினைந்து தினையை வித்திக் காத்தோம். அதுபோய்த்
தீவினையை வித்திக் காத்ததன் விளைவையு முண்டதாகி முடிந்ததெனச், சிறைப்புறமாகத்
தினையொடு வெறுத்து வரைவுகடாதல்.

(வ-று.)

நினைவித்துத் தன்னையென் னெஞ்சத் திருந்தம் பலத்துநின்று
புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொருப் பன்விருப்பின்
தினைவித்திக் காத்துச் சிறந்துநின் றேமுக்குச் சென்றுசென்று
வினைவித்திக் காத்து விளைவுண்ட தாகி விளைந்ததுவே. (திருக். 140)

வேங்கையொடு வெறுத்து வரைவுகடாதல்

என்பது, தினையொடு வெறுத்து வரைவுகடாய தோழி, இவ் வேங்கை
யரும்பியஞான்றே யரும்பறக் கொய்தே மாயினிவரின்று நம்மைக் கெடுப்பான் வேண்டி
இத்தினை கெடமுயலுமாறு முண்டோ, யாமது செய்யப்பெற்றிலே மென, வேங்கையொடு
வெறுத்து வரைவுகடாதல்.

(வ-று.)

கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய்
வினைகெடச் செய்தவன் விண்டோய் கயிலை மயிலனையாய்
நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான்
தினைகெடச் செய்திடு மாறுமுண் டோவித் திருக்கணியே. (திருக். 141)

இரக்கமுற்று வரைவுகடாதல்

என்பது, வேங்கையொடு வெறுத்து வரைவுகடாய தோழி, யாமவனை யெதிர்ப்படலா
மென்றின்புற்றுவளர்த்த தினைத்திரளிப் புனத்தின்க ணில்லாவாயிருந்தன, இனி நாமவனை
யெதிர்ப்படுமா றென்னோவெனச், சிறைப்புறமாகத் தலைமகனுக்கிரக்கமுற்று வரைவுகடாதல்.

(வ-று.)

வழுவா இயலெம் மலையர் விதைப்பமற் றியாம்வளர்த்த
கொழுவார் தினையின் குழாங்களெல் லாமெங் குழாம்வணங்குஞ்