| பொருளதிகாரம் | 305 | முத்துவீரியம் |
வண்ணக் குவளை மலர்கின் றனசின
வாண்மிளிர்நின்
கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு
வாழுங் கருங்குழலே.
(திருக். 162)
இடத்துய்த்து நீங்கல்
என்பது, துயிலெடுத்துக் கொண்டு சென்று,
அக்குறியிடத்து நிறுத்தி, இவை
நின் கண்கள்
வென்ற குவளைமலர், இவற்றைக் காண்பாயாக, யான்
நின் குழற்குச்
சந்தனத்தழை
கொய்யாநின்றே னெனத், தான் சிறிதகலல்.
(வ-று.)
நந்தீ வரமென்னு நாரண
னாண்மலர்க் கண்ணிற்கெஃகந்
தந்தீ வரன்புலி யூரனை யாய்தடங் கண்கடந்த
இந்தீ வரமிவை காணின் னிருள்சேர் குழற்கெழில்சேர்
சந்தீ வரமுறி யும்வெறி வீயுந் தருகுவனே. (திருக். 163)
(கு-ரை.) நந்தீ: விளி, இறைவனின்
திருப்பெயர்களுள் ஒன்று. இந்தீவரம். குவளை.
சந்து
- சந்தனமரம்.
தளர்வகன் றுரைத்தல்
என்பது, தோழி குறியிடை நிறுத்தி
நீங்கத் தலைமகனெதிர்ப் பட்டு, நும்முடைய
கமலக்கோயில், கதிரவன் வருவதன்முன், நீரே திறந்து
கொண்டோ போந்தது,
இப்பொழிலிடை வந்து நயந்ததென்னோ
வெனத், தலைமகளைப் பெரும்பான்மை கூறித்
தன்றளர்வு
நீங்கல்.
(வ-று.)
காமரை வென்றகண் ணோன்றில்லைப்
பல்கதி ரோனடைத்த
தாமரை யில்லின் இதழ்க்கத வந்திறந் தோதமியே
பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே
நாமரை யாமத்தென் னோவந்து வைகி நயந்ததுவே. (திருக். 164)
மருங்கணைதல்
என்பது, பெரும்பான்மை கூறக் கேட்ட
தலைமகள் பெருநாணின ளாதலிற்
றன்முன்னிற்கலாகாது
நாணித் தலையிறைஞ்சி வருந்தச், சென்று சார்தலாகாமையின்,
தனதாதரவு மிகவாலவ்
|