பொருளதிகாரம் | 311 | முத்துவீரியம் |
மற்றுன்று மாமல ரிட்டுன்னை வாழ்த்திவந்
தித்தலன்றி
மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல
ளோமங்கை வாழ்வகையே. (திருக். 178)
(கு-ரை.) புற்று ஒன்று அரவன் -
புற்றிலே பொருந்தி வாழுகின்ற
பாம்பினை யணியாக
வுடைய சிவபெருமான். புற்றொன்று என்பது சாதிபற்றி
வந்தது.
இரவுறுதுயரங் கடலொடு சேர்த்தல்
என்பது, தலைமகனை யெதிர்ப்படமாட்டாது
வருந்தின தலைமகள், இற்றை
யிரவெல்லா மென்னைப்போல
நீயுந் துன்பமுற்றுக் கலங்கித் தெளிகின்றிலை,
இவ்விடத்து
நின்னையுமகன்று சென்றாருளரோவெனத்,
தானுறு துயரங் கடலொடு சேர்த்திக் கூறல்.
(வ-று.)
பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித்
தோன்புலியூர்
ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந்
தோலமிட்டுத்
தீங்கணைந் தோரல்லுந் தேறாய்
கலங்கிச் செறிகடலே
ஆங்கணைந் தார்நின்னை யும்முள
ரோசென் றகன்றவரே. (திருக். 179)
அலரறிவுறுத்தல்
என்பது, தலைமகளிரவுறு துயரங்
கடலொடு சேர்த்தி வருந்து கின்றமை
சிறைப்புறமாகக்
கேட்ட தலைமகன், குறியிடைச்சென்று நிற்பத் தோழி
யெதிர்ப்பட்டு,
நின்னருளாய் நின்றவிது எங்களுக்கலராகாநின்றது,
இனி யிவ்வாறொழுகாதொழிய
வேண்டுமென, அலரறிவுறுத்தி
வரவுவிலக்கல்.
(வ-று.)
அலரா யிரந்தந்து வந்தித்து மாலா
யிரங்கரத்தால்
அலரார் கழல்வழி பாடுசெய் தாற்கள
வில்லொளிகள்
அலரா விருக்கும் படைகொடுத் தோன்றில்லை
யானருள்போன்
றலராய் விளைகின்ற தம்பல்கைம்
மிக்கைய மெய்யருளே. (திருக். 180)
இரவுக்குறி முற்றும்.
|