பக்கம் எண் :
 
பொருளதிகாரம்357முத்துவீரியம்

வெறிவிலக்குவிக்க நினைதல்

என்பது, இருவாற்றானும் நமக்குயிர்வாழும் நெறியில்லை யாதலால் துறைவற்குற்ற
நோயைப் பிறர் சிதைக்கப்படின், நாண்துறந்தும் வெறி விலக்குவிப்பனெனத்,
தலைமகடோழியைக் கொண்டு வெறி விலக்க நினைதல்.

(வ-று.)

சென்றார் திருத்திய செல்லனின் றார்கள் சிதைப்பரென்றால்
நன்றா அழகிதன் றேயிறை தில்லை தொழாரினைந்தும்
ஒன்றாம் இவட்கு மொழிதல்கில் லேன்மொழி யாதுமுய்யேன்
குன்றார் துறைவர்க் குறுவேன் உரைப்பனிக் கூர்மறையே. (திருக். 288)

அறத்தொடு நிற்றலை யுரைத்தல்

என்பது, நாண்டுறந்தும் மறையுரைத்தும் வெறிவிலக்குவிக்க நினைக்கின்ற
தலைமகள், மேலறத்தொடு நிற்பாளாக, அயலாரேசுக, ஊர்நகுக அதுவேயுமன்றி, யாயும்
வெகுள்வளாக, அதன்மேல் நீயுமென்னை முனிவாயாக, நீ தேறாயாகில் சூளுற்றுத்
தருவேன், யான்சொல்லுகின்ற இதனைக் கேட்பாயாக வெனத் தோழிக்குக் கூறா நிற்றல்.

(வ-று.)

யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர்நகுக
நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல் என்னுடைய
வாயும் மனமும் பிரியா இறைதில்லை வாழ்த்துநர்போல்
தூயன் நினக்குக் கடுஞ்சூள் தருவன் சுடர்க்குழையே. (திருக். 289)

அறத்தொடு நிற்றல்

என்பது, அறத்தொடு நிற்பாளாக முன்தோற்றுவாய் செய்து, எம்பெருமாற்குப்
பழிவருங்கொல்லோ வென்னுமையத்தோடு நின்று, யாம் முன்பு ஒருநாள்
கடற்கரையிடத்தே வண்டல் செய்து விளையாடா நின்றேமாக, அந்நேரத்து, ஒரு தோன்றல்,
நும்வண்டல் மனைக்கு யாம் விருந்தென்று வந்து நின்றபொழுது, நீ பூக்கொய்யச் சிறிது
புடை பெயர்ந்தாய், அந்நிலைமைக்கண், கீழ்காற்று மிகுதலால், கரைமேலேறுங் கடல்,
மேல்வந்துற்றது, உற