பொருளதிகாரம் | 360 | முத்துவீரியம் |
வளையா வழுத்தா வருதிருச் சிற்றம்
பலத்துமன்னன்
திளையா வருமரு விக்கயி லைப்பயில்
செல்வியையே. (திருக். 294)
தேர்வரவு கூறல்
என்பது, நற்றாய்க்குச் செவிலி
அறத்தொடு நில்லாநிற்ப, அந்நிலைமைக்கண்
தலைமகனது தேரொலிகேட்ட தோழி, உவகையோடு
சென்று, தலைமகளுக் கதன்
வரவெடுத்துக்
கூறாநிற்றல்.
(வ-று.)
கள்ளினம் ஆர்த்துண்ணும்
வண்கொன்றை யோன்றில்லைக்
கார்க்கடல்வாய்ப்
புள்ளினம் ஆர்ப்பப் பொருதிரை
ஆர்ப்பப் புலவர்கடம்
வள்ளினம் ஆர்ப்ப மதுகரம் ஆர்ப்ப
வலம்புரியின்
வெள்ளினம் ஆர்ப்ப வரும்பெருந்
தேரின்று மெல்லியலே. (திருக். 295)
மணமுரசுகேட்டு மகிழ்ந்துரைத்தல்
என்பது, தோழி தலைமகளுக்குத்
தேர்வரவு கூறாநின்ற அந்நிலைமைக்கண் மணமுரசு
கேட்டு, மனையிலுள்ளார் இஃதிவளை நோக்கி
ஒலியா நின்றது மணமுரசெனவுட்கொண்டு,
யாம் பூரண
பொற்குடந் தோரண முதலாயினவற்றான் மனையை
அலங்கரிப்போமென
மகிழ்வொடு கூறாநிற்றல்.
(வ-று.)
பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம்
பொன்பொதிந்த
தோரண நீடுக தூரியம் ஆர்க்கதொன்
மாலயற்கும்
காரணன் ஏரணி கண்ணுத லோன்கடற்
றில்லையன்ன
வாரண வும்முலை மன்றலென் றே ங்கும்
மணமுரசே. (திருக். 296)
ஐயுற்றுக்கலங்கல்
என்பது, மணமுரசு கேட்டவள்,
மகிழ்வொடு நின்று மனையை யலங்கரிப்ப,
மிகவுங்
களிப்பை யுடைத்தாய நமது சிறந்த
நகரின்கண் முழங்கிய இப்பெரிய முரசம்
யானெவற்கோ அறிகின்றிலேனெனத், தலைமகள்
கலக்கமுற்றுக் கூறல்.
|