| எழுத்ததிகாரம் | 38 | முத்துவீரியம் |
ஏனைய திரிந்து வருதல்
128. ஏனைய வெழுத்துக
ளெல்லாந் திரியும்.
(இ-ள்.) இவையொழிய
மற்றைய வெழுத்துக்களெல்லாந் திரிந்துவந்து
வடமொழியாகும். (14)
ஐ யகரமாகத் திரிதல்
129. அவற்றுள்,
எட்டா மெய்யே யகார
மாகும்.
(இ-ள்.) மேற்கூறிப்
போந்தவற்றுள் எட்டாவது மெய்யாகிய ஐ-யகரமாகத்
திரியும்.
(வ-று.) பங்கயம். (15)
ஸ சகரமாகவும் யகரமாகவும்
திரிதல்
130. ஆறைந் தாமெய் சயவா
கும்மே.
(இ-ள்.) முப்பதா
மெய்யாகிய ஸ முதலிற் சகரமும் நடுவில் யகரமுமாகத்
திரியும்.
(வ-று.) சாலை, மயானம், (16)
ஷ சகரமாகவும் டகர
மாகவும் திரிதல்
131. ஒருமுப் பானொன்
றுடல்சட வாகும்.
(இ-ள்.) முப்பத்தொன்றா
மெய்யாகிய ஷ முதலிற் சகரமும், நடுவில் டகரமுமாகத்
திரியும்.
(வ-று.) சட்டி, இடபம். (17)
ஸ சகரமாகவும் தகரமாகவும்
திரிதல்
132. ஆறைந் திரண்டுட
லாகுஞ் சதவே.
(இ-ள்.) முப்பத்திரண்டா
மெய்யாகிய ஸ முதலிற், சகரமும், நடுவில் தகரமுமாகத்
திரியும்.
(வ-று.) சித்தி, வாதனை. (18)
ஹ அகரமாகவும் ககரமாகவும்
திரிதல்
133. ஆகுமுப் பான்மூன்
றாக்கை யகவே.
|