பொருளதிகாரம் | 384 | முத்துவீரியம் |
பருவங்கண்டிரங்கல்
என்பது, ஏறுவரவு கண்டிரங்கிவருந்
தலைமகன், இம்மேகங்க ளொன்றோடொன்று
தம்மில் விரவுதலால் பொழில் கடோறு
மயில்கள் கூடி யாடாநின்ற இக்கார் காலத்து
அவளென்னை நினைந்தாற்றா ளெனப் பருவங்
கண்டிரங்கல்.
(வ-று.)
கண்ணுழை யாதுவிண் மேகங் கலந்து
கணமயிறொக்
கெண்ணுழை யாத்தழை கோலிநின்
றாலும் இனமலர்வாய்
மண்ணுழை யாவும் அறிதில்லை மன்னன தின்னருள்போல்
பண்ணுழை யாமொழி யாளென்ன
ளாங்கொன்மன் பாவியற்கே. (திருக். 347)
முகிலொடு கூறல்
என்பது, பருவங் கண்டிரங்கி
விரைவில் வருந் தலைமகன் இவ்விடத் தெல்லாம்
முற்பட்டா யாயினும், முதுபெண்டீர் திரண்டு அவள்
இன்னாமையை நீக்கற்கு இல்லுறை
கடவுட்குப் பூசனை செய்யாநிற்கும் நீ ணகரத்திற்கு
என்னின் முற்படாதொழிவாயாக வென,
முற்பட்டுப் போகு
முகிலொடு கூறல்.
(வ-று.)
அற்படு காட்டினின் றாடிசிற்
றம்பலத் தான்மிடற்றின்
முற்படு நீண்முகில் என்னின்முன் னேன்முது வோர்குழுமி
விற்படு வாணுத லாள்செல்லல்
தீர்ப்பான் விரைமலர்தூய்
நெற்படு வான்பலி செய்தய
ராநிற்கும் நீணகர்க்கே. (திருக். 348)
தேர்வரவு கூறல்
என்பது, பொருள் வயிற்பிரிந்த
தலைமகன், முகிலொடுவந்து புகாநிற்ப, இம்முகில்
இவள் ஆவியை வெகுளாநின்ற காலத்தொரு
தேர்வந்து காத்தமையால், இனிவரக்
கடவதனை
வெல்லுமாறு இல்லையெனத் தோழி தலைமகளுக்குத்
தேர்வரவு கூறல்.
(வ-று.)
பாவியை வெல்லும் பரிசில்லை
யேமுகில் பாவையஞ்சீர்
ஆவியை வெல்லக் கறுக்கின்ற
போழ்தத்தின் அம்பலத்துக்
|