பக்கம் எண் :
 
அணியதிகாரம்544முத்துவீரியம்

என்பது, உண்ணிகழ் தன்மை வெளிப்படையாக விளங்க எட்டுவகை
மெய்ப்பாட்டினானும் நடத்தல் சுவையணி. (88)

அதன்வகை

1242. அவைதாம்,
      அச்சமும் வீரமு மவலமுங் காமமும்
      இழிப்பும் வியப்பு மெழில்படு நகையும்
      உருத்திர மும்மென வுரைக்கப் படுமே.

என்பது, அவை அச்சம், வீரம், அவலம், காமம், இழிப்பு, வியப்பு, நகை,
உருத்திரம் என எட்டுவகைப்படும்.

(வ-று.)

வீரம்.

சேர்ந்த புறவி னிறைதன் றிருமேனி
ஈர்ந்திட் டுயர்துலைதா னேறினான்-நேர்ந்த
கொடைவீர மோமெய்ந் நிறைகுறையா வன்கட்
படைவீர மோசென்னி பண்பு. (தண்டி-மேற்)

அச்சம்.

கைந்நெரித்து வெய்துயிர்த்துக் காறளர்ந்து மெய்பனிப்ப
மையரிக்க ணீர்ததும்ப வாய்புலர்ந்தாள்-தையல்
சினவேல் விடலையாற் கையிழந்த செங்கட்
புனவேழ மேல்வந்த போது. (தண்டி-மேற்)

இழிப்பு.

உடைதலையு மூளையு மூன்றடியு மென்புங்
குடருங் கொழுங்குருதி யீர்ப்ப-மிடைபேய்
பெருநடஞ்செய் பெற்றித்தே கொற்றப்போர்க் கிள்ளி
கருநடரைச் சீறுங் களம். (தண்டி-மேற்)

வியப்பு.

முத்தரும்பிச் செம்பொன் முறிததைந்து பைந்துகிரின்
தொத்தலர்ந்து பல்கலனுஞ் சூழ்ந்தொளிருங்-கொத்தினதாம்
பொன்னேர் மணிகொழிக்கும் பூங்கா விரிநாடன்
தன்னேர் பொழியுந் தரு. (தண்டி-மேற்)

காமம்

திங்க ணுதல்வியர்க்கும் வாய்துடிக்குங் கண்சிவக்கும்
அங்கைத் தளிர்நடுங்குஞ் சொல்லலையுங்-கொங்கை