பக்கம் எண் :
 
அணியதிகாரம்553முத்துவீரியம்

தொடர்நிலைச் செய்யுள்

1263. சொற்பொரு ளிருவகை தொடர்நிலை யெனலே.

என்பது, தொடர்நிலைச் செய்யுள், சொல்லினாற் றொடர்தலும் பொருளினாற்
றொடர்தலுமென விருவகைப்படும். (6)

சொற்றொடர் நிலைச்செய்யுள்

1264. ஒருபா விறுதிமற் றொருபா முதல்வரத்
      தொடுப்பது சொற்றொடர் நிலையெனப் படுமே.

என்பது, ஒரு செய்யுளிறுதி மற்றொரு செய்யுண் முதலிலே வரத்தொடுப்பது
சொற்றொடர்நிலை.

(வ-று.) கலம்பக முதலியவற்றிற் காண்க. (7)

பொருட்டொடர்நிலைச் செய்யுளின் வகை

1265. காப்பியம் பெருங்காப் பியமென விருவகைப்
      படும்பொருட் டொடர்நிலை பகருங் காலே.

என்பது, பொருட்டொடர்நிலை சிறுகாப்பிய மெனவும் பெருங்காப்பிய மெனவும்
இரு வகைப்படும். (8)

பெருங்காப்பியம்

1266. அவற்றுள்,
      அறம்பொரு ளின்பம்வீ டாகிய நான்கும்
      புலப்படல் பொருங்காப் பியப்பொரு ளாகும்.

என்பது, அறமும், பொருளும், இன்பமும், வீடும் ஆகிய நான்கு பொருளும்
தோன்றல் பெருங்காப்பியம். (9)

காப்பியம்

1267. அறமுத னான்கினுங் குறைபா டுடையது
      காப்பிய மென்று கருதப் படுமே.

என்பது, அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கனுள் சில குறைந்து வருவது
சிறுகாப்பியம். (10)

வைதருப்ப நெறி

1268. சமாதி சிலீட்டமா லேசஞ் சமதை
      பொருட்டெளி வின்பம் புலன்சுகு மாரதை