கூத்து என்பது கூத்தாடு என்ற வினையிலிருந்து உண்டானதாகக் கொண்டு முதனிலை இல்லாமல் தொழிற்பெயர் ஆக வந்தது என்று விளக்குவர். அவ்வாறே சண்டை (சண்டையிடு), வேட்டை (வேட்டையாடு) முதலியனவும் கொள்ளலாம். பொருள் செயல்வகை என்ற தொடரில் பொருள் செய்யும் வகை என்பதால் தொழிற்பெயர் பெயரெச்சமாக வந்துள்ளது. மெய்யீறு எல்லாம் புள்ளியொடு நிலையல் (தொல் : 104) என்ற தொடரில் ‘நிலையல்’ என்ற தொழிற்பெயர் வினை முற்றாக வந்துள்ளது. வியங்கோள் : கிளத்தல் (கிளக்குக) ; ஒரால் (நீக்குக); வாழ்தல் வேண்டும்; பாடன்மார் எமரே; அஞ்சாமை (நான்மணி 27. 1) ; வாழ்க; வாழிய; வாழியர். இச்சூத்திரம் இலக்கணக்கொத்து 71, 72, 85 ஆகிய சூத்திரங்களையும் இலக்கண விளக்கம் 239-ஆம் சூத்திரத்தையும் (வியங்கோள் பற்றியது) தழுவியது. பாட விளக்கம் : ‘வேணடும்’ (3-வது வரி) என்று மூல பாடம் ‘வேண்டும்’ என்ற திருத்தப்பட்டுள்ளது. 52. | முற்றிலது பிறசொல்நோக் குவதுஎச் சமாகு(ம்); முடிதல் பெயர் வினையிலாஞ், செய்யெனும்வாய் பாடு பெற்றுஇறுதிசுட்டதின்எட் டுஒற்றுஅமையத் திரியும் பெயரெச்சம்; முக்காலம் இடைநிலையாற் காட்டி மற்றகாம்இ றப்புநிகழ் வுக்குஎதிர் உம்ஈறாய் வாய்பாடு செய்தசெய்கின் றசெய்யும் எனவே நற்றொழிற்செய் பொருட்,செய்வோன், நிலங்,கருவி கால நண்ணி,முடி வாங்காலத் தொகைகுறிப்பாய்ச் செய்யே. (6) | எச்சத்தின் பொது இலக்கணமும் பெயரெச்சமும் விளக்குகின்றது. |