சூத்திரத்து மொழியினுடைய பொருளைக் கருத்து உரையும் உதாரணமும் கொண்டு வினா விடையாலும் (கேள்வியை எழுப்பிக் கொண்டு பதில் கூறுதல்) விளக்குவது காண்டிகை உரை. சூத்திரத்திலுள்ள பொருளொடு பிற நூலாசிரியரின் கருத்தாலும் தன்னுடைய உரையாலும் காண்டிகை உரைத் தன்மையோடு சந்தேகம் நீங்குமாறு சொல்லுவது விருத்தி உரை. இவ்வாறு நூலின் தன்மையை உணர்ந்து உரையாலும் போதனையாலும் தன்னுடைய அறிவாலும் தமிழை அறிந்து கொள்ள வேண்டும். விளக்கம் : நன்னூல் 16, 17, 18, 22, 23 ஆகிய சூத்திரக் கருத்துக்களைத் தழுவியது இது. |