அறியாய் என்பது அறிவாயாக என்ற பொருளில் வருவது, செய்யாய் என்ற செய் என்ற முன்னிலை வாய்பாட்டில் வருவதாகும். பத்துவகை எச்சம் பற்றித் தொல்காப்பிய உரையாசிரியர் களுக்குள் இருவித கருத்துக்கள் காணப்படுகின்றன. இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர் ஆகிய மூவரும் ஒரு விதமாகவும் தெய்வச்சிலையார் மற்றொரு விதமாகவும் பொருள் கொண்டுள்ளனர். இளம்பூரணர் போன்றோரின் கருத்துப்படி எதிர்மறை போன்ற ஏழுவகை எச்சமும் முன்னரே விளக்கப்பட்டு மீண்டும் வேறுநோக்கில் இங்கு பேசப்படுவதாக ஆகிறது. அப்படியாயின் இன்னும் பல எச்சங்களை (சிறப்பெச்சம் போன்றவற்றை)விட்டது ஏன் என்றகேள்வி எழுகிறது. எனவே தெய்வச்சிலையார் கருத்தே பொருத்தமானது என்று திரு. குமாரசாமிராஜா ‘தொல்காப்பியம் கூறும் எஞ்சு பொருட்கிளவி’ என்ற கட்டுரையில் விரிவாக ஆராய்ந்துள்ளார். | இளம்பூரணர் உதாரணம் | | தெய்வச்சிலையர் உதாரணம் | | | | | எதிர்மறை : | ‘யானோ கொண்டேன்’ என்பது யான் கொண் டிலன் என எதிர்மறைப் பொருள் தருவது | | ‘இம்மைப்பிறப்பிற் பிரியலம்’ எனவே எதிர்மறையாக ‘ அடுத்த பிறவியில் பிரிவேன்’ | | | | | பிரிவு : | அவனே கொண்டான்’ என்பது அவன்தான் கொண்டான் என்ற பொருள் தருவது | | ‘இவட்குக் கண் அழகிது’ மற்றுள்ள உறுப்புக்கள் அழகில்லை என்ற ஏனைய உறுப்பைப்பிரித்து நின்றது. | | | | | ஒழியிசை : | கூரியதோர் வாள்மன் | | இவர் கல்வியாற் குறைவிலர்; ஒழுக்கத்தார் குறைவுடையர். | |