பக்கம் எண் :
 
சுவாமிநாதம்161சொல்லதிகாரம்
 

     சிவிகை பொறுத்தான் (சிவிகையைத் தூக்கினவர் ஒருவராக
இல்லாமையால், வருமொழி நோக்காமல் தனக்குரிய ஒருமைப்பாலைவிட்டுப்
பன்மைப்பாலை விளக்குதலால் உயர்திணைச் சாதி ஒருமை.

     ‘அஞ்சுவது அஞ்சாமை பேதைமை’ (குறள் 428) -
     அஃறிணைச் சாதி ஒருமை.
     ‘எண்என்ப ஏனை எழுத்து என்ப’ (குறள் 392) -
     உயர்திணைச் சாதிப் பன்மை

‘இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’ (குறள் 392) - அஃறிணைச்
சாதிப்பன்மை.

     ‘பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்; இருள் தீர
எண்ணிச்செயல்’ (குறள் 675) இங்கு ஒடு என்ற ஒரு சொல்லே ஒவ்வொரு
பெயரோடும் சேர்ந்து வருவதால் ஒரு சொல் நின்று தனித்தனி உதவியுள்ளது.

     செங்கோல் என்பதை ஒரு சொல்லாகவும் பொருப்பன் என்பதனைப்
பொருப்பு என்னும் உரிமைப்பொருளை உடையான் என்று பல சொல்லாகவும்
கொள்வர்.

     வேலன் - வேல் என்பது காரணப் பெயராயினும் முருகனைக்
குறிப்பதால் இடுகுறிப் பெயராயிற்று.

     இடுகுறிப்பெயரெல்லாம் ஒரு காலத்தில் காரணமாகவே இருந்திருக்க
வேண்டும் என்பதால் இடுகுறிப் பெயராயினும் காரணப் பெயர் கருதுவது.

     பழையன கழிதல் : சங்க காலத்தில் இருந்த இசின், சின் போன்ற
அசைகளும் அழன், வெரிந் போன்ற சொற்களும் வழக்கு ஒழிந்தன.
தொல்காப்பியர் காலத்தில் இல்லாத கிறு, கின்று போன்ற இடைநிலைகளும்
யவனர், சைவர் போன்ற சொற்களும் புதிதாக மொழியில் வந்து சேர்ந்தன.

     இது இலக்கணக் கொத்து 130, 116 ஐயும் நன்னூல் 462, இலக்கண
விளக்கம் 371 ஆகியவற்றையும் தழுவியது.