(திருமணத்தில் விருப்பம்), 15. வரைவு கடாதல் (திருமணத் துக்குப் பெண் கேட்டல்) 16. ஒரு வழித்தணத்தல் (திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற தோழியின் கருத்தை ஒத்துக் கொண்ட தலைவன் தன் ஊர்க்கு ஒரு வழிப்போய் வருகிறேன் என்று கூறிப்போதல்), 17. வரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிதல் (திருமணத்தை உறுதி செய்துகொண்டு பொருள் ஈட்டுவதற்காகப் பிரிதல்) என்ற பதினேழு வகையும் களவிற்குரிய கிளவியின் தொகையாகும். விளக்கம் : இது நம்பியகப்பொருள் 123ஆம் சூத்திரத்தை ஒட்டியது. ‘இடைமீடு’ (2வது வரி) என்று மூலத்தில் இருந்தது. ‘இடையீடு’ என்று திருத்தப்பட்டுள்ளது. ‘பிரிவின் வியத்தல்’ என்று வருவதைப் பின்னால் (4 ஆம். சூத். 88) பிரிந்து மகிழ்ச்சி என்று கூறுகின்றார். 87. | அதிய தெய்வப்புணர்ச்சி,கலந் துழிமகிழ்தல், நலம்பா ராட்டல்,ஏற் புறவணிமூன் றாம்வேட்கை உணர்த்தல் அதுமறுத்தல், உடன்பாடு கூட்டம்,நால் வகைத்தால்; இரவுஎண்ணல் இரந்து இடன்முன் னாக்குதல்மெய் தீண்டல் மதிபொய்பா ராட்டிஇடம் பெற்றுஅணைதல் வழிபாடு மறுத்தல்இடை யூறுசொல்ல(ல்) நீடுநினைந்து இரங்கல் முதியமறுத்து எதிர்கொளல்வீண் (ந)கை நகைவாய்ப்பு (உ)ணர்தல் முயங்கல்புண ருதல்புகழ்அவ் ஐமூன்றுஇறைவிப் புணர்வே. [3] | இது இயற்கைப் புணர்ச்சியின் விரி கூறுகின்றது. உரை: இயற்கைப்புணர்ச்சியின் பாகுபாடாகிய இரண்டினுள் ஒன்றாகிய தெய்வக் கூட்டப்புணர்ச்சி என்பது 1. கலந்துழி மகிழ்தல் (புணர்ச்சி ஏற்பட்டபோது மகிழ்தல்), 2. நலம் பாராட்டல் (அவளது நல்ல பண்புகளைப் பாராட்டுதல்), 3. ஏற்புற அணிதல் என மூன்று வகைப்படும். மற்றொன்றாகிய தலைமகளாற் புணரும் புணர்ச்சி, 1. வேட்கை உணர்த்தல், 2. மறுத்தல், 3. உடன்படுதல், 4. கூட்டம் என்ற நான்கு |