பக்கம் எண் :
 
சுவாமிநாதம்19எழுத்ததிகாரம்
 

     விளக்கம் : தலை என்பது மூச்சுக்காற்றுச் செல்லும் மேல் தொண்டை,
வாயறை மூக்கறை ஆகியவற்றைக் குறித்து நிற்பதாகத் திரு. முருகையன்
(தொல்காப்பியரின் ஒலியியல் கொள்கை - தொல்காப்பிய மொழியியல் என்ற
நூலில் பக்கம்-8) கருதுகிறார்.

     வல்லெழுத்து உச்சி (தலை)யை இடமாகக் கொண்டு பிறக்கும் என்பது
இலக்கண விளக்கத்தை (‘உச்சி வன்மை’10) ஒட்டியது.

     மிடற்றில் உயிரும் இடையினமும், மூக்கில் மெல்லினமும் உண்டாகும்
என்றது அங்குதான் அவை சிறப்பு மாற்றம் பெறுகின்றன என்பதைக்
குறிக்கிறதே தவிர அங்கு ஒலி உண்டாவதைக் குறிக்கவில்லை. இலக்கணப்
பிறப்பியலை மொழியியல் கண்கொண்டு இலக்கணக் கருத்துக்களை நல்ல
முறையில் விளக்கி முருகையன் அவர்களின் ‘தொல்காப்பியரின் ஒலியியல்
கொள்கை’ என்ற கட்டுரை எழுதப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

17. அண்ண(ம்) முதலிடை நுனிநாவுற வுடன்முன்னாறாம்
     அண்பல் அடிநாமுடி யொத்திடத் தநவாம் இதழ்கள்
கண்ணிவிடப் பமவாம் அண்ணக் குழியின் மிடற்றுக்கால்
     அடிநாப்பற்ற யவ்வாம் நுனிநா வண்ணத்தின்
நண்ணி மேல்வருட ரழவாம் அண்பல் அண்ண[ம்]
     நாவிளிம்பு ஒத்தித் தைவர லளவாம் கீழ்இதழின்
விண்ணகை குற்றிட வவ்வா[ம்] நுனிநா வண்ணத்தின்
     மேல் ஒத்தறனவாம் சில பேதகவன்புறுமே      (5)

மெய்யெழுத்துக்களின் பிறப்புக் கூறுகின்றது.

     உரை : அண்ணத்தை முதல் நாவும் இடை நாவும் நுனிநாவும்
பொருந்த முறையே ‘க்’ ‘ங்’, ‘ச்’ ‘ஞ்’, ‘ட்’, ‘ண்’ ஆகிய ஆறு ஒலிகளும்
தோன்றும். அண்பல்லின் அடிப்பகுதியை நாவின் முடி நன்றாகப் பொருந்த
‘த்’ ‘ந்’ பிறக்கும். இதழ் ஒன்றோடொன்று பொருந்த ‘ப்’, ‘ம்’ வும்
மிடற்றிலிருந்து வரும் காற்று இடை அண்ணமும் அடிநாவும் பொருந்த ‘ய்’
யும், நுனிநா அண்ணத்தைப் பொருந்திப் பக்கம் வருட ‘ர்’, ‘ழ்’ வும்,