பக்கம் எண் :
 
சுவாமிநாதம்253யாப்பதிகாரம்
 

3. வண்ணகஒத்தாழிசைக் கலிப்பா, கலிப்பாவிற்குரிய பண்பான கலித்தளை
தட்டுக் கலியோசை தழுவியும் வெண்தளைதட்டு வெள்ளோசை தழுவியும்
மூன்றுசீர் இறுதியில் வருவது 4. வெண்கலிப்பா. ஒரு தரவு வந்தது, 5. தரவு
கொச்சகக் கலிப்பா. இரண்டுதரவு வந்தது, 6. தரவிணைக் கொச்சகக் கலிப்பா.
சில தாழிசை வந்தது, 7. சில் தாழிசை கொச்சகக்கலிப்பா, பல தாழிசை
வந்தது, 8. பல் தாழிசை கொச்சகக்கலிப்பா, தரவு, தாழிசை, அராகம்,
அம்போ தரங்கம், தனிச்சொல், சுரிதகம் என்ற ஆறு உறுப்புக்களும் தம்முள்
மயங்கி வந்தது, 9. மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா. ஆகக் கலிப்பா ஒன்பது
வகைப்படும்.

160. அளவுஒத்துஈறு உயர்ந்துஅடிமட் டிலகலித்தா ழிசைநான்கு
     அடிநெடிலும் அதிற்பன்னேழ் பன்னாறுஎண் முடிவுங்
களவற்ற கலித்துறைநே ரடிநான்கு பெறுதல்
     கலிவிருத்தம் இன(ம்)மூன்றாந்; தூங்கல்இசை வஞ்சி,
தெளிவுற்ற குறளடிசிந் தடியாகித் தனிச்சொற்
     சேர்ந்துசுரி தகங்கள்இறுங் குறளடிநான் குஒருமூன்று
உளதுற்ற தாழிசைஅங்கு அவைஒன்று துறைசிந்
     தொருநான்கு விருத்தம்வஞ் சியின்மூன்றின் சீரே. [5]

கலிப்பாவின் இனமும் வஞ்சிப் பாவின் வகையும் உணர்த்துகின்றது.

     உரை. ஒத்த அளவுடைய அடிகளைக்கொண்டு இறுதி அடி மட்டும்
மிகுந்தும் வருவது கலித்தாழிசை நெடிலடி நான்காய்ப்பதினேழு எழுத்தும்
பதினாறு எழுத்தும் பெற்று வருவது கலித்துறை. நாற்சீரடி நான்காய் வருவது
கலிவிருத்தம் எனக் கலிப்பாவிற்கும் மூன்று இனம் உண்டு.

     தூங்கல் ஓசையை உடையது வஞ்சி குறளடி வஞ்சிப்பாவும் சிந்தடி
வஞ்சிப்பாவும் தனிச்சொல் பெற்றுச் சுரிதகத்தால் முடியும். இரண்டு சீர் அடி
(குறளடி) நான்காய் மூன்று செய்யுள்