பக்கம் எண் :
 
சுவாமிநாதம்269யாப்பதிகாரம்
 
     உரை : வடமொழியில் நேரசைக்கு இலகு என்றும் நிரையசைக்குக் குரு
என்றும் பெயர். வெண்சீர் நான்கும் (காய்ச்சீர்) முறையே (நகர மெய்யில்
ஆரம்பிக்கும் எழுத்துக்கள்) ப, த, ச ஆகிய எழுத்துக்களையும் வாழ்நாள்,
புகழ், சூனியம், நோய் ஆகிய பயனையும் சுவர்க்கம், மதி, வான், பரிதி
ஆகிய இடங்களையும் பெற்றுப் பொருந்திவரும். அவ்வாறே வஞ்சிச்சீர்
(கனிச்சீர்) நான்கும் முறையே ச, ர, ம, ய, என்ற எழுத்துக்களையும் கேடு,
அழிவு, திரு, மகிழ்ச்சி ஆகிய பயன்களையும் காற்று, தீ, நிலம், நீர் ஆகிய
இடங்களையும் பெற்றுப்பொருந்தி வரலாம் ஏனையவை பொருத்தமாக
அமையாது. இயற்சீர் நான்கும் (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) முறையே
பிரமன், திரு, அரசன், கருடன் ஆகியவற்றோடு பொருந்திவரும்.

     இதில் கூறப்படாத விதிகளைப் பல்வேறு உத்திகள் மூலம்
அமைத்துக்கொள்ள வேண்டும்.

     விளக்கம் : சிதம்பரப்பாட்டியல் பொருத்தவியல் 9, 10-ஆம்
சூத்திரங்களைத் தழுவியது. ஆயிலும் சிதம்பரப் பாட்டியலில்வெண்சீருக்கு
ந, ப, த, வ என்று (அதாவது சகரத்திற்குப் பதில் வகரம்)
குறிப்பிடப்பட்டுள்ளது*


     *இந்தச் சூத்திரத்திற்கு உரை எழுத உதவிய திருவாளர் ச.
தண்டபாணிதேசிகர் (விரிவுரையாளர், தமிழ்த்துறை, அண்ணாமலைப்
பல்கலைக் கழகம்) அவர்களுக்கும் இது சிதம்பரப்பாட்டியலோடு ஒப்புமை
உடையது என்று காட்டியுள்ள திருவாளர் உ. பழநி அவர்கட்கும் என் நன்றி.