|         192.  |                 விசித்ததொழி லினிற்குறிப்பின் அரும்பொருளே உணரும்               வினைத்திறன்நுட் பமாதம்;இன் னார்க்குஇதுமுற்                                                   றிடவொன்று          இசைப்பதுவாழ்த் து;ஒருபொருளின் வனப்புவிதந்து உரைக்கில்               இவ்வுலக வரம்புஇறந்தும் இறவாதும் பெரியோர்          அசைத்துவியந் திடஉரைப்பது அதிசெயமாம்; இவைதாம்               ஐயாறில் ஒன்றோடொடுஒன்று இரண்டுமுதற் பலவும்          ஒசிப்பிலதாய் கலத்தல்சங் கீரணம்;இதில் கூறாதது               உண்டெனிற்கூ றியஅணியின் அடக்குவதாம் விதியே. [14] |                 நுட்பம், வாழ்த்து,     அதிசயம், சங்கீரணம் ஆகியவற்றை விளக்குகின்றது.           உரை     : தொழிலாலும்     குறிப்பாலும் அருமையான பொருளை உணரும்      தன்மையே நுட்ப அணி. இந்தத் தன்மையை உடையவர்க்கு இது நிகழ்க      என்று கூறுவது வாழ்த்து அணி. ஒரு பொருளில்உள்ள அழகை      வெளிப்படையாகக் கூறும்போது உலக நடையைத் தாண்டியும் தாண்டாமலும்      பெரியோர் வியப்படையும்படிக் கூறுவது அதிசய அணி. இந்த முப்பது      அணிகளுள் ஒன்றோடு ஒன்றும் பலவும் தம்முட் பொருந்த உரைப்பது      சங்கீரண அணி. இங்கே கூறாத அணிகள் உண்டு என்றால் அவற்றை      முன்னே கூறியவற்றுள் அடக்கிக் கொள்ளவேண்டும்.           விளக்கம்     : இது தண்டியலங்காரம் 64, 88, 54, 89 ஆகிய      சூத்திரங்களைப் பின்பற்றியது.                            |         193.  |         ஏதுவிலக்கு,         உருபகம்;தற் குறிப்புடன்வி ரோதம்,               இசைத்திடுஞ்சி லேடை,அதி சயம்வேற்றுப் பொருளில்          ஓதும்உவ மையும்விலக்குஏது, அவனுதிசி லேடை,               உவமையினில் உருபகமும், உருபகஞ்சி லேடை,          மூதுவமைத் தீபகமும், உவமையிற்பின் னிலையும்,               மொழிஉவமை, உருவகத்தின் வேற்றுமையும், உவமை          மீதுறுதல், குறிப்பும்வேற் றுப்பொருள்சி லேடை,               விளம்புஏது வினில்விலக்கு முதல்சங்கீ ரணமே    [15] |                 சங்கீரண அணியின்     விரி கூறுகின்றது.       |