பக்கம் எண் :
 
சுவாமிநாதம்296
 

     தொடரியலின் விதிமுறைகளை உணர்த்தி ஒருவகையில் நீக்கவேண்டிய
சொற்கள் இன்றியமையாதது என்று தோன்றினால் அமைத்துக்கொள்ளலாம்.

     முன்னும் பின்னும் கூறிய கருத்துக்களை அறிந்துகொண்டு ஏற்கும்
இடம் அறிந்து உதாரணம், மேற்கோள் முதலியவற்றைக் காரணம் அறிந்து
தழுவ வேண்டும்.

     இவையெல்லாம் ஐந்து வகை இலக்கணமும் உணர்ந்த தமிழ் கூறு
நல்லுலகில் அறிந்து செயல்படவேண்டும்.

     விளக்கம் : இது தண்டியலங்காரம் 99ஆம் சூத்திரத்தைத் தழுவியது.

     பாட விளக்கம் : ‘என்றமைக்கவிநூல்’ (3வது வரி) என்பது மூலபாடம்.

 அமைதி மரபு முற்றும்.

அணியதிகாரம் முற்றும்.