உரிமுன் பெயர், வினை, இடை, உரி ஆகியன) புணர்ந்தால் உயிர் முதன் மொழியாக வருமொழி இருக்குமானால் சாரியையின் மெய் கெட்டுவிடும். வல்லின, இடையின, மெல்லின முதன் மொழி வந்தால் இயல்பு, மிகுதல், உறழ்ச்சி, திரிதல், கெடுதல், நிலைமாறுதல் என்று ஆறு தன்மைகளை உடையவாய் ஏற்ற முடிவு பெற்று வரும். விளக்கம் : நடை + அழகு = நடையழகு - உயிர்முன் உயிர் நடை + தீது = நடைதீது - உயிர்முன்மெய் கல் + அழகு = கல்லழகு - மெய்முன்உயிர் கல் + குறிது = கற்குறிது - மெய்முன்மெய் நூல் + அழகு = நூலழகு - பெயர் முன் பெயர் நூல் + பெற்றான் = நூற்பெற்றான் - பெயர் முன் வினை நூல் + கு = நூற்கு - பெயர் முன் இடை அம்பு + கடிவிடுதும் = அம்புகடிவிடுதும் - பெயர்முன்உரி இவ்வாறே வினை முதலிய ஏனைய சொற்களின் முன்னும் நான்கு சொற்களும் புணர்தல் கொள்க. இயல்பு - நிலா + முற்றம் = நிலாமுற்றம் மிகுதல் - வாழை + பழம் = வாழைப்பழம் உறழ்ச்சி - கிளி + குறிது = கிளிக்குறிது ~ கிளிகுறிது திரிதல் - பொன் + குடம் = பொற்குடம் கெடுதல் - மரம் + வேர் = மரவேர் மாறுதல் - நாளி + கேரம் = நாரிகேளம் (இலக்கணக் கொத்திலிருந்து எடுக்கப்பட்டது) முதல் பகுதியில் நன்னூல் 151-ஆம் சூத்திரத்தையும் அறுவகை மாற்றம் என்பதில் இலக்கணக்கொத்து |