| ஊற்றுபெயர் தோன்றல்,வினை முதலாதல், பயனை யுறுதல்வினை யுறுதல்,விகா ரப்பெயர்பின், விகுதி ஏற்றல்உருபு என்பர்;ஆ னவன்முதல்ஐம் பால்மூன் றிடமுக்காலச் சொல்பெயர்க் குருபுஎன்னப் படுமே. (8) | வேற்றுமை உருபுகளையும் முதல் வேற்றுமையையும் கூறுகின்றது. உரை : வேற்றுமையாவன பெயர், ஐ, ஆல், கு, இன், அது, கண், விளி என்பன. ஐயும் குவ்வும் ஓர் உருபாம். ஏனைய வேற்றுமை உருபுகளுக்குச் சொல் உருபுகள் பல உள்ளன. எழுவாய் வேற்றுமைக்கு உருபு இல்லை என்று சொல்வர். பெயர் தோன்றிய நிலையில் இருத்தல், கருத்தாவாக வருதல், பயனை உறுதல், வினைச் சொல்லைப் பெற்று வருதல், விகாரப் பெயர்களான தன், தம், நம் என் முதலியன பின்னால் வேறு ஏற்றல், ஆகியவை எழுவாயின் பண்புகள். ஆனவன், ஆனவள், ஆனவர், ஆனது, ஆனவை போன்று ஐந்து பாலிலும் மூன்று காலத்திலும் மூன்று இடத்திலும் வரும் சொற்கள் எழுவாய் வேற்றுமைக்கு உருபாகவும் வரும். விளக்கம் : ஐ, கு என்பன ஓர் உருபாம் என்றது அவற்றிற்கு வேறு சொல்லுருபு இல்லை என்பது. குவ்விற்குப் பொருட்டு என்பது சொல் உருபாயினும் அது பொருட்டுப் பொருளில் (purposive) மட்டுமே வருவது. கொடை போன்ற பிற பொருளில் வரும்போது சொல்லுருபு வராது. முதல் வேற்றுமை கருத்தாவாக வருதல் : சாத்தன் எழுதினான். பயனை உறுதல் : சாத்தன் உண்டான். வினையை உறுதல் : சாத்தன் பெருத்தான். பிற உருபேற்பதற்குத் தகுதியான மூவிடப் பெயர்களின் வடிவங்களான என், நும் போன்றவை |