‘புரைதீரா மன்னா விளமை' *என்றும் இவை பெயரெச்சம் உடன்
அடுக்கி வந்து முடிந்தன.
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள.
(குறள், 1101)
என இது வினையெச்சம் உடனடுக்கி வந்து முடிந்தது. என்னை?
வினையெஞ்சு கிளவியும் பெயரெஞ்சு கிளவியும்
பலபல வடுக்கினு முற்றுமொழிப் படிய
என்றாராகலின்.
உண்ணாத சாத்தன், உறங்காத வில்லி என எதிர்மறுத்த
விடத்தும்
பெயரெச்சமாந் தன்மை திரியாதவாறு கண்டுகொள்க.
உண்ணாது உறங்கினான், ஓதாது உணர்ந்தான் என்பன எதிர்
மறுத்துச் சொன்ன விடத்தும் வினையெச்சமாந் தன்மை திரியாதவாறு
அடைவே கண்டுகொள்க.
பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும்
எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா
(தொல். வினை. 39)
இனி, எச்சங்களிடையே சில சொல் நின்று
முடியுமாறு: அடுஞ்
செந்நெற் சோறு, அட்ட செந்நெற்சோறு; இவை பொருத்தமுடையனவாய்
வருதலாலே செந்நெல் என்ற சொல் இடைநின்ற பெயரெச்சம்.
உப்பின்று புற்கை யுண்கமாதோ கொற்கை யானே
இது பொருத்த முடைத்தாய் வருதலாற் ‘புற்கை' என்னும் சொல் இடைநின்ற
வினையெச்சம்.
தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பின்
எச்சொல் லாயினும் இடைநிலை வரையார்
(தொல். வினை. 40)
இனிப் பொருத்த மில்லாதன களையுமாறு:
வல்லம் எறிந்த நல
விளங்கோசர் மகன் பெருவழுதி என்றால் வல்லம் எறிதல் பெரு
-------------------------
*நாலடியார் செ. 11.
|