உஊ ஒஓ ஒளவென விசைக்கு
மப்பா லைந்து மிதழ்குவிந் தியலும்.
|
தொல்.பிறப்.5. |
தத்தந் திரிபே சிறிய வென்ப.
|
6 |
ககார ஙகார முதனா வண்ணம்.
|
7 |
சகார ஞகார மிடைநா வண்ணம்.
|
8 |
டகார ணகார நுனிநாவண்ணம்.
|
9 |
அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின.
|
10 |
அண்ண நண்ணிய பன்முதன் மருங்கின்
நாநுனி பரந்து மெய்யுற வொற்றத்
தாமினிது பிறக்குந் தகார நகாரம்.
|
11 |
அணரி நுணிநா வண்ண மொற்ற
றஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும்.
|
12 |
நுனிநா வணரி யண்ணம் வருட
ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும்.
|
13 |
நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற
ஆவயி னண்ண மொற்றவும் வருடவும்
லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும்.
|
14 |
இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்.
|
15 |
பல்லித ழியைய வகாரம் பிறக்கும்.
|
16 |
அண்ணஞ் சேர்ந்த மிடற்றெழு வளியிசை
கண்ணுற் றடைய யகாரம் பிறக்கும்.
|
17 |
மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ்
சொல்லிய பள்ளி நிலையின வாயினு
மூக்கின் வளியிசை யாப்புறத் தோன்றும்.
|
18 |
சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத்
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றுந்
தத்தஞ் சார்பிற் பிறப்பொடு சிவணி
யொத்த காட்சியிற் றம்மியல் பியலும். |
18 |