கட்சி, காடு, கிடங்கு, கீரி, குன்று, கூதிர், கெண்டை, கேதகை, கைதை,
கொங்கு, கோங்கு, கௌவை எனவும்;
சகடம், சாகாடு, சிரல், சீர்மை, சுவல், சூது, செறல், சேறல், சையம்,
சொன்றி, சோறு, சௌரியம் எனவும்;
தந்தை, தாதை, திரு, தீமை, துத்தி, தூது, தெங்கு, தேயம், தையல்,
தொன்மை, தோல், தௌவை எனவும்;
நடம், நாட்டம், நிறம், நீர்மை, நுகம், நூழில், நெஞ்சு, நேயம், நைவு,
நொசிவு, நோக்கு, நௌவி எனவும்;
படை, பாடி, பிறை, பீரம், புறம், பூமி, பெற்றம், பேதை, பைதல்,
பொத்தகம், போதம், பௌவம் எனவும்;
மல்லல், மாமை, மிடல், மீளி, முடி, மூங்கை, மென்மை, மேன்மை,
மையல், மொட்டு, மோத்தை,1 மௌவல் எனவும்;
வங்கம், வாளி, விளக்கு, வீரம், வென்றி, வேழம், வையம், வௌவினார்
எனவும்;
ஞாலம், ஞெகிழி, ஞொள்கிற்று எனவும்;
யானை, யூகம், யோகி எனவும்;
இத்தொண்ணூற்றெட்டு எழுத்தும் முறையானே வந்தவாறு
கண்டுகொள்க. ஏனை எழுத்தும் தம்மைக் கூறும் இடத்துத் தாம் முதலாய்
நிற்கும்.
ரஃகா னொற்றும் பகர விறுதியு
மாரைக் கிளவி யுளப்பட மூன்று
நேரத் தோன்றும் பலரறி சொல்லே.
தொல். கிளவி. 7
என்னும் இந்நிலைமண்டில ஆசிரியப்பாவின்கண் ரகரம் முதலாக
உச்சரித்தவாறு கண்டுகொள்க; ரகரம் தன்னைச் சொல்லுதலால் என அறிக.
என்னை?
முதலா வேன தம்பெயர் முதலும்
தொல். மொழிம.33
என்ப ஆகலின்.
ஒற்றெழுத்தை முதலாக உச்சரித்தவாறு என்னையோ? எனின், ஒற்றுத்
தன்னைச் சொல்லுதலான் முதலாகக் கொண்டு உச்சரித்தான், அகரமேற்றி
எனக் கொள்க.
-----------------------
1. தொல். பொருள். மரபியல். 45-ஆம் சூத்திரத்தில் மொத்தை என்று
பாடம் காணப்படுகின்றது.
|