|
எ - ன்:
ளண லன மெய்கள் முடியுமாறு உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
நிலைமொழி யிறுதியி னின்ற ளகார ணகார லகார
னகாரங்கள் இயல்பாய் நிற்க, வருமொழிக்கு முதலாக வல்லெழுத்து வந்தால்
ளகார ணகாரங்கள் டகாரமாம்; லகார னகாரங்கள் றகாரமாம். நிலைமொழி
யிறுதியினின்ற ளகார லகாரங்கள், வருமொழிக்கு முதலாக மெல்லெழுத்து
வந்தால் ளகாரம் ணகாரமாம்; லகாரம் னகாரமாம். இவை நிரனிறை எனக் கொள்க. தந்நக்கள்
முன் பின்னாம் என்பது டகாரங்களின் பின் வந்த தகாரமும் டகாரமாம்; றகாரங்களின் பின்வந்த
தகாரமும் றகாரமாம். ணகாரங்களின் பின்வந்த நகாரமும் ணகாரமாம்; னகாரங்களின் பின்வந்த
நகாரமும் னகாரமாம். ‘தப்பி னணவியல் பாத் தட்டறவாம்' என்பது நிலைமொழி யிறுதியினின்ற
ணகார னகாரங்கள் இயல்பாய் நிற்க வருமொழிக்கு முதலாகத் தகாரம் வந்தால் ணகாரத்தின்
பின் வந்த தகாரமும் டகாரமாம்; னகாரத்தின் பின்வந்த தகாரமும் றகாரமாம். ‘ஒன்றழிந்து
போதல்'
என்பது, நிலைமொழியீற்றி னின்ற ளகார லகாரம் இயல்பாய் நிற்க
வருமொழிக்கு முதலாக வல்லெழுத்து வந்தால் நிலைமொழி யீற்றி னின்ற
ளகார லகாரம் அழிந்து முடியவும் பெறும் எ - று.
வ - று:
முள், மண், கல், பொன் என நிறுத்தி ஏற்ற சொற்களை
வருவித்து இவ்விலக்கணத்தான் முட்கூரிது, மட்கலம், கற்பெரிது, பொற்பூண்
என முடிக்க. ‘மென்மை வரினே ள ல ண ன வாம்' என்பது முள், சொல்
என நிறுத்தி, மெல்லெழுத்து வருவித்து, முண் முரிந்தது, சொன் முரண் என
முடிக்க.
‘தந்நக்கள் முன்பின்னாம்' என்பது வல்லெழுத்தாகிய தகாரமும்
மெல்லெழுத்தாகிய நகாரமும் வருமொழிக்கு முதலாக வரின், டகார
றகாரங்களின் பின் வந்த தகாரத்தை அழித்து டகார றகாரமாக்கி,
முட்டாமரை கற்றாமரை எனவும் னகார ணகாரங்களின் பின் வந்த
நகாரத்தை னகார ணகாரமாக்கி வின்னன்று, பொன்னன்று, விண்ணீண்டது,
கண்ணொந்தான் எனவும் முடிக்க.
|