பக்கம் எண் :
 
எழுத்து அதிகாரம்31

      னின்ற மகரந் திரிந்து தகர, வகர, யகரமாகவும் பெறும் எ - று.
 
     
வ - று: மரம் என நிறுத்திக், கலம், குறிது, சிறிது, செதிள், தூண்,
தடிந்தார், பாவை என வல்லெழுத்து முதலான சொற்களை வருவித்து,
மரக்கலம், மரங்குறிது, மரஞ்சிறிது, மரச்செதிள், மரத்தூண், மரந் தடிந்தார்,
மரப்பாவை என முடிக்க.

      மரம் என நிறுத்தி, ஞான்றது, நீண்டது, மாண்டது என வருவித்து,
மகாரத்தை அழித்து, மரஞான்றது, மரநீண்டது, மரமாண்டது என முடிக்க.

      காலம் என நிறுத்தி, வந்தது என வருவித்துக், காலம் வந்தது என
முடிக்க.  இவ்விடத்தில் மகரங் கான் மாத்திரையாய்க் குறுகிற்று. ஞாலம்
விளங்கிற்று என்பதும் அது.

      தெவ் என நிறுத்தி,  முனை என வருவித்து, இவ்விலக்கணத்தால்
தெம்முனை என முடிக்க.

      மகரத்தினது திரிபு உணர்த்திய எடுத்துக்கொண்டு, வகரத் திரிபு
காட்டிய தென்னையோ? வெனின், மகரத்தை விட்டு மற்றொரு முடிபு
சொல்லிற்றில்லை. மகரத்தையே சொல்லுதலாற் பெறும்;  என்னை? ‘ஒப்பின்
முடித்தல்' என்பது தந்திரவுத்தியாதலால் என்பது.
 
      இனிச் செம்மை என நிறுத்தி, ஆம்பல் என்பது வருவித்து,
‘ஆங்குயிர்மெய் போம்' 1 என்பதனால் மகர ஐகாரத்தை அழித்து, ‘மகரந்
தவயவாம்' என்பதனால் மகரவொற்றைத் தகரமாக்கி, முதல் உயிரை நீட்டிச்,
‘செம்மையுயி ரேறுஞ் செறிந்து,'2 என்பதனால் தகர வொற்றிலே உயிரை
ஏற்றிச் சேதாம்பல் என முடிக்க.  செம்மை என நிறுத்தி அலரி, ஆடை என
வருவித்து, மகர ஐகாரத்தை அழித்து, முன்னின்ற மகரவொற்றை வகரம்
ஆக்கிக், ‘குற்றொற்றிரட்டும்' என்பதனால் வகர வொற்றை இரட்டித்து,
‘ஒற்றுண்டேற் செம்மையுயி ரேறுஞ் செறிந்து' என்பதனால் வகர வொற்றில்
உயிரை ஏற்றிச் செவ்வலரி, செவ்வாடை, என முடிக்க. ஐம்மை என நிறுத்தி,
அரி என வருவித்து, மகர ஐகாரத்தை அழித்து, மகர வொற்றை யகரமாக்கி,
‘முன் னொற்றுண்டேற் செம்மையுயி ரேறுஞ் செறிந்து' என்பதனால் ஐயரி
என முடிக்க.

        பண்பீற்று நிலைமொழியில் மகரம், தகர, வகர, யகரமாவது
வருமொழிக்கு முதலாக உயிர்வரின் என அறிக. பிறவும் அன்ன.
-------------------------
1. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 22.
2. இந்நூலின் இவ்வதிகாரம். சூ. 4