பக்கம் எண் :
 
எழுத்து அதிகாரம்33

      எ - ன்: இதுவுஞ் சில உயிரீற்றளவுப் பெயர் முடிபு பெறுமாறும்,
விகாரங்களாமாறும் உணர்த்துதல் நுதலிற்று.

     
இ - ள்: நாழியென்னுஞ் சொல்லின்பின் உரியென்னுஞ் சொல்
வந்தால் நிலைமொழி இறுதியினின்ற ழகர இகரம் அழிந்தும், டகரமாய்
உகரம் ஏறி முடியவும் பெறும்; சில சந்திகள் அகர நின்றனவும் திரிந்து
ஐகாரமாம்; ஐகார நின்றனவுந் திரிந்து அகரமாம். அறுவகைப்பட்ட
விகாரமும் மூன்று வகைப்பட்ட விகாரமும் வந்தால் விகாரப்படுமிட மறிந்து
முடிக்க. எ - று.

     
வ - று: நாழி என நிறுத்தி, உரி என வருவித்து, நிலை மொழி ஈற்றி

னின்ற ழகர இகரத்தை அழித்து, ழகரத்தை டகரமாக்கி, உகரத்தை ஏற்றி,
நாடுரி, இரு நாடுரி என முடிக்க.

       பசுமை என நிறுத்திக் கிளி, சுனை, தளிர், பொழில்  என
வல்லெழுத்து முதலான சொற்களை வருவித்து, ‘ஓரோர் மறுவில் பதங்கெட்டு
வரும்'1 என்பதனாற் சுமை என்னும் பதத்தைக் கெடுத்து, பகரவெற்றில்
அகரத்தைப் பிரித்து, ஐகாரமாக்கி, ‘வாய்ந்த வுயிர்ப் பின் வருமெழுத்தின்
வர்க்கத்தொற் றேய்ந்து புகுதுமியல்புமாம்' என்பதனால் வர்க்கத்தொற்றை
மிகுத்துப் பைங்கிளி, பைஞ்சுனை, பைந்தளிர், பைம்பொழி்ல் என முடிக்க.
பசுங்கிளி என்ற பொழுது நிலை மொழி இறுதியினின்ற உயிர்மெய்யைக்
கெடுத்து, இவ்விடத்து ‘வாய்ந்த வுயிர்ப்பின் வருமெழுத்தின் வர்க்கத்
தொற்றேய்ந்து புகுதுமியல்புமாம்' என்பதனால் ஙகரவொற்றை மிகுத்து
முடிக்க. இனிப்பாசிழை என்றாம் பொழுது உமை என்னும் பதத்தைக்
கெடுத்து, ‘நீட்டும்வழி நீட்டல்' என்னும் விகாரத்தாற் பகரத்தில் அகரத்தைப்
பிரித்து நெட்டெழுத்தாக்கிச் சகார ஒற்றிலே உயிரை ஏற்றிப் பாசிழை என
முடிக்க. பனை, ஆவிரை, கூவிளை, வழுதுணை என நிறுத்தி, வல்லெழுத்து
முதலான சொற்களை வருவித்து, ஐகாரத்தைப் பிரித்து, அகரமாக்கி, ‘வர்க்கத்
தொற்றேய்ந்து புகுதும்'2 என்பதனால் பொருந்திய ஒற்றை மிகுத்துப்
பனங்காய், பனஞ்சோறு, ஆவிரம்பூ, கூவிளந்தளிர், வழுதுணங்காய் என
முடிக்க.
------------------------
1. இந்நூலின் இவ்வதிகாரம் சூ. 6.
2. இந்நூலின் இவ்வதிகாரம் சூ. 16.