எ - ன்:
திணைகளின்கண் ஐந்து பாலும் அறியும் சொற்களின்
ஈற்றெழுத்து இவை என்பது உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
தத்தமக்குப் பொருந்திய வினையையும், வினைக்குறிப்பையும்
கொண்டு, உயர்திணைக்கு, அன் ஆன், இறுதியாய் வருவன ஆடூஉ
வறிசொல்; அள் ஆள் இறுதியாய் வருவன மகடூஉ வறிச்சொல்; அர், ஆர், ப இறுதியாய் வருவன
பலரறி சொல்; அவ்வண்ணமே, அஃறிணைக்கும், வினையையும் வினைக்குறிப்பையும் கொண்டு,
துவ்வும், றுவ்வும், டுவ்வும் இறுதியாய் வருவன ஒன்றறி சொல்; அவ்வும், ஆவும், வவ்வும்
இறுதியாய் வருவன பலவறி சொல் எ - று.
தன்வினை கொண்டு என்பது மத்திம தீபம்.
வினைக்குறிப்பு என்பது பெற்றவாறு என்னையோ? எனின், வினைக்
குறிப்பும் வினையின் வேறல்ல; ஆதலாற் பெறும்.
வ - று:
அன் - உண்டனன், உண்ணா நின்றனன், உண்குவன்
எனவும்; ஆன் - உண்டான், உண்ணாநின்றான், உண்பான் எனவும், இவை,
காலத்தியறலான் வினை.
கரியன், செய்யன், கரியான், செய்யான் இவை காலந் தோன்றாமையான்
வினைக் குறிப்பு.
அள் -
உண்டனள், உண்ணாநின்றனள், உண்குவள் எனவும்; ஆள் -
உண்டாள், உண்ணாநின்றாள், உண்பாள் எனவும் இவை வினை.
கரியள், செய்யள், கரியாள், செய்யாள் இவை வினைக் குறிப்பு.
அர் -
உண்டனர், உண்ணாநின்றனர், உண்குவர் எனவும்; ஆர் -
உண்டார், உண்ணா நின்றார், உண்பார் எனவும் இவை வினை.
கரியர், செய்யர், கரியார், செய்யார் இவை வினைக்
குறிப்பு.
ப -
உண்ப, தின்ப எனவும் இவை வினை. உயர்திணை முப்பாலும்
அடைவே கண்டுகொள்க.
து -
உண்டது, உண்ணாநின்றது, உண்பது இவை வினை.
கரியது, செய்யது இவை வினைக் குறிப்பு.
று -
கூயிற்று, தாயிற்று இவை வினை.
|