பக்கம் எண் :
 
76நேமி நாதம்

இயல்பாய் விளியேற்கும். உயிரீற்று அளபெடைப் பெயரும் அவ்வள
பெடுத்தபடியே விளியேற்கும் 1 எ-று.

      அவை வருமாறு: நம்பி நம்பீ எனவும், நங்கை நங்காய் எனவும்,
வேந்து வேந்தே எனவும், கோ கோவே எனவும் விளியேற்றன.

     இவை அணியாரைக் கூவுமிடத்து, நம்பி வருக, நங்கை வருக, வேந்து
வருக, கோ வருக என்று இயல்பாய் விளியேற்றன. தொழீஇஇ 2 என்னும்
அளபெடைப் பெயரும் அளபெடுத்த படியே இயல்பாய் விளியேற்றது எனக்
கொள்க. பிறவும் அன்ன.

      ‘உண்மை' என்று மிகுத்துச் சொல்லிய வதனால், ஐகார ஈற்றுப்
பெயர்களில் ஆண்டை என்னும் சொல் ஈறாம் பெயர்களும், முறைப்
பெயர்களில் அத்தை அம்மை என்னும் பெயர்களும் ஏகாரம் பெற்றே
விளியேற்கும் எனக் கொள்க. அவை வருமாறு: கூத்தாண்டை கூத்தாண்டே
என்றும், அத்தை அத்தே என்றும், அம்மை அம்மே என்றும் விளியேற்கும்
எனக் கொள்க. பிறவும் அன்ன.
-------------------------
     1.  அளபெடைப் பெயர்க் கண்ணும், உண்மை இயல்பாய்
உறும்  என இந் நூலாசிரியரும்,  உயிரீற்று அளபெடைப் பெயரும்
அளபெடுத்தபடியே விளி ஏற்கும்  என இந்நூலின் உரையாசிரியரும்
பொதுவாகக் கூறினார்கள். எனினும் ‘ஏற்பழிக் கோடல்' என்னும்
உத்தியான். இ, ஐ, உ, ஓ என்னும் இந் நான்கு உயிரீற்றுப்
பெயர்களுள் இகர உயிரீற்றுப் பெயர்க்கே இவ்விதி உரியதாம் என்று
கொள்க; என்னெனின், ஆசிரியர் தொல்காப்பியனார்.
     

   அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்
   இயற்கைய ஆகும் செயற்கைய என்ப  
 (தொல். விளிமரபு. சூ.8.)


என அந்நான்கு உயிரீற்றுள் இகர உயிரீற்றுக்கே அவ்விதி கூறுதலின்
என்க.

      ஆசிரியர் தொல்காப்பியருக்குப் பிற்காலத்து மேற்குறித்த
உயிர்களுள் இகரம் ஒழிந்த மற்றை உயிரீற்றினும் இங்ஙனம்
அளபெடை மிக்கு இயல்பாம் பெயர் உண்டாயினமையை நோக்கி
இந்நூலாசிரியரும், இந்நூலின் உரையாசிரியரும் அங்ஙனம்
பொதுவாகக் கூறினார்கள் என்னலாகாதோ? எனின் பின்னர் இகர
ஈற்றுப் பெயரன்றி, வேறு உயிரீற்றுப் பெயர் இதற்கு உதாரணமாகக்
காட்டப்படாமையானும் இச்சூத்திரத்தினும் அந்நான்கு ஈற்றிற்குமே
விதி கூறி இருத்தலானும் அங்ஙனம் கொள்ளலாகாது என்க.

     2. ஈண்டு இது ‘தொழீஇஇ' என்று காட்டப்பட்டிருக்கின்றது.
இஃது ஏடு எழுதுவோரால் நேர்ந்த பிழையாகும். தோழீஇ, என்பது
அளபெடையை உடையதாய் அது மிக்கு இகர இறுதியாகி நிற்கும்

பெயரன்று. அது ‘தோழி' என இயல்பினாகிய இகர இறுதியைக்
கொண்டு நிற்கும் பெயராகும். ஈண்டுக் கூறப்பட்டது  'ஆடூஉ',
‘மகடூஉ' என்பனபோல இயற்கைஅ