அவை வருமாறு: சாத்தன் சாத்தா என்றும், கொற்றன்
கொற்றா
என்றும் அன் இறுதி ஆஆய் விளியேற்றது. சாத்த, கொற்ற என்று
அணியாரைக் கூவுமிடத்து அகரமாய் விளியேற்றது. மகன், மருமகன் என்னும்
முறைப்பெயர் மகனே, மருமகனே என ஏகாரம் பெற்று விளியேற்றன.
சேரமான், மலையமான் என்னும் ஆன் ஈற்றுப் பெயர்கள் இயல்பாய் நின்று
விளியேற்றன. அழாஅன் புழாஅன் என்னும் அளபெடைப் பெயர்கள்
இயல்பாய் நின்று விளியேற்றன. கரியான், செய்யான் என்னும் ஆன் ஈற்றுப்
பண்புப் பெயர் கரியாய், செய்யாய் என ஆய்ஆய் விளியேற்றன. உண்டான்,
தின்றான் என்னும் ஆன் ஈற்றுத் தொழிற்பெயர் உண்டாய், தின்றாய் என
ஆய்ஆய் விளியேற்றன.
‘ஒன்றின முடித்தல் தன்னின முடித்தல்' என்பதனால், அன் என்னும்
இறுதியும் ஆய்ஆய் விளியேற்கும். பண்பினும் தொழிலினும் கரியன் -
கரியாய், உடையன் - உடையாய் என வரும்.
‘முன்' என்று மிகுத்துச் சொல்லியவதனால், இரண்டு குறிற்கீழ்
வரும்
அன் ஈற்றுப் பெயர்கள் விளியேற்குமிடத்து ஏகாரம் பெற்று விளியேற்கும்
என்றவாறு. அவை வருமாறு: அயன்-அயனே, சிவன்-சிவனே, நளன்-நளனே,
தரன்-தரனே, பரன்-பரனே என விளியேற்றன.
மகன்-மகனே என்று விளியேற்கு முடிவே இவற்றிற்கும் அமையாதோ
எனின், அமையாது; அது முறைப்பெயர் ஆதலானும், முறைப்பெயர் இரண்டு
குறிற்கீழல்லது வாராது என்னும் யாப்புறவு இன்மையானும் ஈண்டுச்
சொல்லவேண்டிற்று. பிறவும் அன்ன.
(3)
ரகர ஈற்றுப் பெயர் விளிஏற்கும் வகை
27. ஈராகும் அர்ஆர் இதன்மேலும் ஏகாரம்
ஓரோ விடத்துளதாம் ஓங்களபரம் - பேர்கள்
இயல்பாம் விளியேலா எவ்வீற்றுப் பேரும்
புயல்போலுங் கூந்தலாய் போற்று.
எ - ன்:
ரகாரவீற்றுப் பெயர் விளியேற்குமாறும், விளியேலாப்
பெயரும் உணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்: அர் ஆர் என்னும் பெயர்கள் ஈராய் விளியேற்கும்;
அவற்றுட் சிலசொல் ஈரோடு ஏகாரம் பெற்று
|