பக்கம் எண் :
 
சொல் அதிகாரம்81

     இ - ள்:  எல்லா ஈற்று விரவுப் பெயரும் விளி ஏற்குமிடத்து முன்பு
உயர்திணைக்குச் சொன்னபடியே விளி ஏற்கும்; அஃறிணைப்பெயர் விளி
ஏற்குமிடத்து ஏகாரமும் பெற்று விளி ஏற்கும்; ‘ஏகாரமும்' என்ற உம்மையால்,
உயர்திணைக்குச் சொன்னபடியே விளி ஏற்பனவும் உள; உயிரீற்றுப் பெயரும்
ஒற்றீற்றுப் பெயரும் சேய்மை நிலத்தாரைக் கூவுமிடத்து, உயிர் பன்னிரண்டு
மாத்திரையும் ஒற்றுப் பதினொரு மாத்திரையும் நீளும் என உணர்க எ-று.

      அவை வருமாறு: சாத்தன்-சாத்தா, சாத்தி-சாத்தீ, தந்தை-தந்தாய் என
விரவுப் பெயர் மேலே வந்து விளி ஏற்றன. பொன்-பொன்னே, கார்-காரே,
அணில்-அணிலே, தேன்-தேனே என ஏகாரம் பெற்றும் அஃறிணை விளி
ஏற்றன. தென்றல்-தென்றால், முல்லை-முல்லாய் என அஃறிணை உயர்திணை
போல விளி ஏற்றன. பிறவும் என்ன.                          
(6)
                      
       

விளி மரபு முற்றும்
-----
ஐந்தாவது பெயர் மரபு
       

30. பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல்
   இயற்சொன் முதனான்கும் எய்தும் - பெயர்ச்சொல்
   உயர்திணைப்பேர் அஃறிணைப்பேர் ஒண்விரவுற்
   றியலும் எனவுரைப்பர் ஈங்கு.

    
எ - ன்:  இவ்வோத்து என்ன பெயர்த்தோ? எனின், பெயர்மரபு
என்னும் பெயர்த்து. இவ்வோத்தினுள் இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ?
எனின், பெயர்ச் சொற்களது பகுதி உணர்த்துதல் நுதலிற்று.

    
 இ - ள்: பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல்
என்னும் நான்கினையும் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்
என்னும் நான்கனோடும் உறழப் பதினாறாம்; அவை, பெயரியற்சொல், 
வினையியற்சொல்,  இடையியற்சொல், உரியியற்சொல் எனவும்;
பெயர்த்திரிசொல், வினைத்திரிசொல், இடைத்திரிசொல், உரித்திரிசொல்
எனவும்; பெயர்த்திசைச்சொல், வினைத்