‘ஒண்விரவுப் பெயர்' என்று மிகுத்துச் சொல்லிய வதனால்,
இடைச்சொல்லும் உரிச்சொல்லும் தனித்து நடவா, பெயரொடும்
வினையொடும் கூடி நடக்கும் என்றறிக.
சொல்லெனப் படுப பெயரே வினையென்
றாயிரண் டென்ப வறிந்திசி னோரே
(தொல். பெய. 4)
இடைச்சொற் கிளவியு
முரிச்சொற் கிளவியு
மவற்றுவழி மருங்கிற் றோன்று மென்ப
(தொல். பெய. 5)
என்பவாகலின்.
வரலாறு: அதுமன் - இது பெயரொடு வந்த இடைச்சொல். உறுகால் -
இது பெயரொடு வந்த உரிச்சொல். கொன்னே வந்தான் - இது வினையொடு
வந்த இடைச்சொல். நாமவருந் துறைபோதல் இது வினையொடு வந்த
உரிச்சொல். இவை பெயரொடும் வினையொடும் நடைபெற்றவாறு. பிறவும்
அன்ன.
(1)
உயர்திணைப் பெயர் ஆமாறு
31. சுட்டே வினாவொப்பே பண்பே தொகு னளர
ஒட்டுப்பேர் எண்ணியற்பேர் ஒண்ணிலப்பேர் - இட்டிடையாய்
கூடியற்பேர் காலங் குலந்தொழிலின் பேர்மகடூஉ
ஆடூஉ உயர்திணைப்பேர் ஆம்.
எ - ன்:
உயர்திணைப்பேர் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று.
இ - ள்:
சுட்டுப்பெயர்களும், வினாப்பெயர்களும், உவமைப்
பெயர்களும், பண்பின்பெயர்களும் என்று இச்சொல்லப்பட்ட ன ள ர
ஈறாகிய பெயர்களும், எண்ணியற் பெயர்களும், நிலப்பெயர்களும்,
கூடியற்பெயர்களும், காலப்பெயர்களும், குலப்பெயர்களும், தொழிற்
பெயர்களும், ஆடூஉ, மகடூஉ என்னும் பெயர்களும் உயர்திணைப் பெயராம்
எ-று.
அவை வருமாறு: அவன், அவள், அவர், இவன், இவள், இவர், உவன்,
உவள், உவர் என இவை சுட்டுப்பெயர்.
|