பக்கம் எண் :
 
96நேமி நாதம்

ஒருமையாம்:  உண், சேர், பொரு என்பனவும் முன்னிலை ஒருமையாம்
எ-று.

     அவை வருமாறு: மின்: உண்மின், தின்மின் என்றும்; இர்: உண்டனிர்,
உண்ணாநின்றனிர், உண்குவிர் என்றும், ஈர்: உண்டீர், உண்ணாநின்றீர்,
உண்பீர் உன்றும், மின், இர், ஈர் இறுதியாய் வரும் வினைச்சொற்கள்
இரண்டு திணைக்கும் முன்னிலைப்பன்மையாயினவாறு கண்டுகொள்க.
இ: உண்டி, தின்றி, வருதி, சேறி என்றும்; ஐ: உண்டனை உண்ணாநின்றனை,
உண்குவை என்றும்; ஆய்: உண்டாய், உண்ணா நின்றாய், உண்பாய்
என்றும்; உண், சேர், பொரு என்றும்; இ, ஐ, ஆய், உண், சேர், பொரு
என்பன இருதிணைக்கும் முன்னிலை ஒருமை விரவுவினையாயிற்று. பிறவும்
அன்ன.

     ‘விளம்பு மிருதிணை' என்று மிகுத்துச் சொல்லிய வதனால், இருதிணை
வினைகளும் பல பொருள்கள் ஏற்று வரும்; என்னை?

     
 வினையே செய்வது செயப்படு பொருளே
      நிலனே காலங் கருவி யென்றா
      இன்னதற் கிதுபய னாக வென்னும்
      அன்ன மரபின் இரண்டொடுந் தொகைஇ
      யாயெட் டென்ப தொழின்முத னிலையே 
                                         (தொல். வேற். மய. 29)
என்றா ராகலின்.

      வரலாறு: வனைந்தான் என்புழி, வனைதற்றொழிலும் செய்வானும்
செயப்படுபொருளும் செய்யுமிடமும் காலமும் கருவியும் இன்னதற்கு என்றும்
இன்னபயனுக்கு என்றும் இவ்வெட்டுப் பொருளும் நடைபெற்றன. இவ்
வெட்டிற் சில குறைந்து வருவனவும் உள. என்னை?

  
   வழங்கியன் மருங்கிற் குன்றுவ குன்றும் 
                                         (தொல். வேற். மய. 30)

என்றாராகலின், கொடியாடிற்று என்றாற் சில குறைந்தன. பிறவும் வந்தவழிக்
கண்டுகொள்க.                                              
(5)