உண்பாக்கு வந்தான் எனப் பின், முன், பான், பாக்கு வந்தவாறு.
‘செய்பாக்கறிந்து' என்றார்
பிறரும் எனக் கொள்க.
செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை யொன்பதும் வினையெஞ்சு கிளவி
பின்முன் கால்கடை வழியிடத் தென்னு
மன்ன மரபிற் காலங் கண்ணிய
வென்ன கிளவியு மவற்றியல் பினவே
அவற்றுள்,
முதனிலை மூன்றும் வினைமுதன் முடிபின
அம்முக் கிளவியுஞ் சினைவினை தோன்றிற்
சினையொடு முடியா முதலொடு முடியினும்
வினையோ ரனைய வென்மனார் புலவர்
ஏனை யெச்சம் வினைமுத லானு
மான்வந் தியையும் வினைநிலை யானுந்
தாமியன் மருங்கின் முடியு மென்ப
(தொல். வினை. 31-35)
1ஒரு வினையெச்சம் மற்றொரு வினையெச்சங் கொண்டு முடிவனவும்
உள. அவை, கோழி கூவிப் பொழுது புலர்ந்தது என்னும் செய்தென்னும்
எச்சம் கோழி கூவப் பொழுது புலர்ந்தது என்று செய் என்னும் எச்சமாகத்
திரித்துச் சொல்லுக. ஞாயிறு பட்டு வந்தான் என்பது ஞாயிறு பட வந்தான்
என்று அறிக.
உரற்கால் யானை
யொடித்துண் டெஞ்திய யா (குறுந். 232)
ஒடித்துண்ண என்க என்பதும் அது.
வினையெஞ்சு
கிளவியும் வேறுபல் குறிய
(தொல். எச். 61)
பிறவும் அன்ன.
(6)
-------------------------------
1. ஒரு வினையெச்சம் மற்றொரு வினையெச்சமாகத் திரிந்து
நிற்றலும்
உண்டு என்பது இதன் கருத்தாம் எனக் கொள்க.
|