பக்கம் எண் :
 
எழுத்திலக்கணம்114
தைப் புலவர்கள் குற்றியலிகரம் என்பர். அவனியாவன், களிற்றியானை என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாம் என்றவாறு.
நிலைமொழியீற்று மெய்முன் யகரம் வந்தால் இகரம் தோன்றும் என்பது இவர் கோட்பாடு. இது இந்நூல் 122 ஆம் நூற்பா உரையுள் காட்டப்பட்டது. அவண் உள உயிர்மெய் உகரம் பெரும்பாலும் குற்றுகரமே எனினும், “யவ்வரின் இய்யாம் முற்றும் மற்றுஒரோவழி”1 என்பதற்கேற்பப் பொதுவாக உயிர்மெய் என்றார். கதவியாது, கதவியாத்தான் என இரு வழிகளிலும் முற்றுகரம் இகரமாதல் காண்க.
(153)
154.உயிர்மெய் உகரம் ஈற்றுஉள மொழிப்பின்
 எவ்வுயிர் வரினும் உகரத்து இடங்கவர்ந்து
 அதைஒரீஇ நிற்கை மிகைபடும் வாய்பாடு;
 அதனைக் குற்றிய லுகரம்என் றிடலுண்டு;
 உதாரணம் அவனுக் கிவளார் எனலே.
உகரமேறிய உயிர்மெய்யை இறுதியிற் பெற்ற சொல்லுடன் எவ்வுயிர் மொழிமுதலாக வந்து புணர்ந்தாலும் பெரும்பாலும் ஈற்றுகரம் கெட்டு வருமுயிர் ஏறி நிற்கும். இவ்வுயிர் மெய்யைக் குற்றியலுகரம் என்பர். அவனுக்கிவளார் என்ற தொடர் இதற்கு உதாரணம் ஆம் என்றவாறு.
நூற்பா வாளா உயிர்மெய் உகரம் எனினும் குற்றியலுகரம் என விதந்தோதியமையின் அவை வல்லின உயிர்மெய் என்பது பெறப்பட்டது. “உகரம் ஈற்றுஉறு பதம் இரண்டு விதமாம் முற்றுகரம் எனவும் குற்றுகரம் எனவும் அவற்றுள் முந்தியது உயிர்வரில் கேடுறாமையும் ஏனையது கெடுதலும் இயற்கை ஆகும்”2 என்றார் பிறிதோரிடத்தும்.
குற்றியலுகரம் உயிரோடு புணருங்கால் தான் கெடாது நின்றே உயிர் ஏற இடங்கொடுக்கும் என்பது இளம்பூரணர்,3 நச்சினார்க்கினியர்4 கோட்பாடு, ஆனால் இவ்வாசிரியர்,