பக்கம் எண் :
 
எழுத்திலக்கணம்116
வரும்வாழ்வு என்பது இதற்கு உதாரணம் ஆம் என்றவாறு.
நன்னூல், “ணனமுன்னும் வஃகான் மிசையும் மக்குறுகும்”1 எனத் தனிமொழி புணர்மொழி இரண்டிடத்தும் மகரக் குறுக்கம் காட்டிற்று. இவர் புணர்மொழியில் இடம்பெறும் மகரக்குறுக்கத்தை மட்டும் இங்கு அதிகாரம் பற்றிக் குறிப்பிடுகிறார், சில இடங்களில் இந்த மகர மெய் முற்றிலும் கெடுதலும் உண்டு என்பதைக்குறிக்க விதியாக வரையறுக்காமல், “மகரக் குறுக்கம் ஆம் என வாய்பாடு” என்கிறார். இது இவரால், “மப்பின் வகரம் வரில் உரு இருந்தும் குன்றும்; உதாரணம் குலம்வலிது என்னல்; வேறோர் விதத்தில் கெடுதலும் உண்டு; மரவயிரம் எனத் தனவலி எனவே”2 என விளக்கப்பட்டுள்ளது.
(156)
157.ஆஓ இரண்டும் தனித்தனி இரட்டின்
 பிற்பொறி ககர வுயிர்மெய் ஆதல்உண்டு;
 ஆகா ஓகோ எனும்இவை உதாரணம்.
ஓரெழுத் திடைச்சொற்களாகிய ஆ, ஓ என்னுமிரண்டும் தம்மொடுதாமே புணருங்கால் இரண்டாவது உயிர்நெடில் ககரவருக்கமாகத் திரிதலும் உண்டு. ஆகா, ஓகோ எனும் சொற்கள் இதற்கு உதாரணங்களாம் என்றவாறு.
உயிரொடு உயிர்க்கு மயக்கம் இன்மையின் உடம்படுமெய் வேண்டப்படுகிறது. ய,வ ஆகிய இரு மெய்களே உடம்படு மெய்யாகும் என்பது இவர்க்கும் உடன்பாடே. ஆவுடன் ஆ சேரும் போது, “ஆவா வென்றே யஞ்சின ராழ்ந்தார் ஒருசாரார்”3 என வகர உடம்படுமெய்யே இலக்கியத்துள் பயின்று வருகின்றது. எனினும் ஆகா, ஓகோ என்பன தற்போது வழக்கில் உள்ளன. இவற்றை இரு நெடில்களின் புணர்ப்பாகக் கொள்ளாமல் ஒரு தனிச் சொல்லாகக் கொள்ளலே சிறப்பாம், அன்றி வட