IV. திரிவியல்பு | | இவ்வியலுள் சில சொற்களின் வடிவங்கள் திரிதல், அன் மொழித்தொகை, ஆகுபெயர், பொருள் மயக்கம் இல்லாமல் கூறுதல், குறைச் சொல், முன்னோர் மொழியைப் பின்னோர் எடுத்தாளல், வகையுளி, சில சாரியைகள், விகுதிகள், சில இடைச்சொற்கள், சில புணர்ச்சி விதிகள் முதலியன இடம் பெற்றுள்ளன. இவைகளில் பெரும்பாலும் சொற்களின் வடிவமோ அல்லது பொருளோ மாறி வருவதால் இவையனைத்தும் திரிவியல்பில் தொகுக்கப்பெற்றன. இவ்வியல்பு 27 நூற்பாக்களைக் கொண்டு உட்பிரிவுகள் இன்றி விளங்குகிறது. | | 86. | முன்வரும் இயல்பில் மொழிந்துகாட் டியவா | | | மருமகன் மருகன் ஆகிய பகுதியும், | | | துளவே துழாய்எனத் துலங்குமோர் பகுதியும் | | | திரிவுஎனில் தகுமே ஆயினும் சிலர்தாம் | | | மரூஉச்சொல் என்றும் வாய்பா டென்றும் | | | இயம்பல்உண்டு; உணர்வார்க்கு இஃதும்ஓர் திரிவே. |
| | இவ்விலக்கணத்தின் (முதல் இயல்பாகிய) பொதுவியல்பில் முன்பே எடுத்துக்காட்டியவாறு மருமகன் என்ற சொல் மருகன் என (இடைக்குறை பெற்று) வழங்குவதும், துளவு துழாய் என ஆளப்படுதலும் திரிவு எனத்தக்கதேயாம். என்றாலும் சிலர் இவற்றை மரூஉச்சொல் என்றும், மரபுபட்ட வாய்பாடு என்றும் கூறுவர். ஆராய்ந்து பார்த்தால் மரூஉ, மரபுவழி வாய்பாடு என்பனவும் திரிவே ஆகும் என்றவாறு. | | இந்நூல் 170 ஆம் நூற்பாவில் வருகிறவன், கொண்டுவந்து ஏனடி என்பவை முறையே வாரவன், கொண்டாந்து, ஏண்டி எனமருவி வழங்கப்படுதல் காட்டப்பெற்றன. இங்கே மருகன், துழாய் ஆகியஇரு மாற்றங்கள் காட்டப்பெறுகின்றன. இத்தகையவை அனைத்தையும் சொற்றிரிவு எனலே தக்கதாம் என்பது இந்நூலாசிரியார் கொள்கை. திரிந்த வடிவம் ஒன்று தொடர்ந்து ஆளுகைக்குட்பட்டுவிட்டால் அது மரூஉ மொழி |
|
|