பக்கம் எண் :
 
சொல்லிலக்கணம்180
98.சொல்லீற்றைத் திரித்தும் தான்திரிந்தும் ஒன்றும்
 அன்இன் இரண்டும் உடைமையைக் காட்டும்;
 அதன்பொருள், பசுவின் கன்றுஎனல் உதாரணம்.
ஒரு சொல்லொடு அதன் ஈற்றைத் திரித்தோ, அல்லது தன் முதல் எழுத்து திரியும் படியாகவோ அன், இன் என்ற இரு விகுதிகளும் சேர்ந்தால் உடைமைப் பொருளைத் தரும். அதன் பொருள், பசுவின் கன்று என்ற இரு தொடர்களும் இதற்கு எடுத்துக் காட்டுகளாம் என்றவாறு.
அது + அன் - நிலைமொழியின் ஈறுதிரிந்து அதன் என ஆனதற்கும், பசு + இன் - வகர உடம்படுமெய்யால் இகரம் திரிந்து பசுவின் என ஆனதற்கும் உதாரணங்களாம். அதனுடைய பொருள், பசுவினுடைய கன்று என உடைமைப் பொருளில் வந்தன. இந்த அன், இன் இரண்டும் பொதுச்சாரியைகள் ஆகும்.
(263)
99.ஆன், அன், ஓன்எனும் மூன்றும் ஆண்பால்
 உடைமை காட்டும்; மயிலான் முருகன்
 சேவ லோன்எனச் செப்பிடல் உதாரணம்.
ஆன், அன், ஓன் ஆகிய மூன்றும் ஒரு பெயர்ச்சொல்லுடன் விகுதியாகப் புணர்ந்து உடைமையஉடைய ஆண்பாலைக் குறிக்கும். மயிலான், முருகன், சேவலோன் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகள் ஆம் என்றவாறு.
மயிலை உடையவன், முருகை உடையவன், சேவலை உடையவன் என்று உடைமைப் பொருளில் வந்தன. இவை வினைக்குறிப்பு விகுதிகள் எனப்படும்.
(264)
100.மொழியீற்று ஐவரில் செய்மாறு உணர்த்தும்
 குரவனை வணங்குஎனல் குலவுஉதர ரணமே.
ஒரு சொல்லின் இறுதியில் ஐ (என்ற உருபு) சேருமாகில் அது அச்சொல்லைச் செயப்படுபொருளாகக் காட்டும். குரவனை வணங்கு என்பது எடுத்துக்காட்டாகும் என்றவாறு.