பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்193
கருமையான நீண்ட கூந்தலுக்குக் கொண்டையாகக் கட்டுதலும், அவிழ்த்து விடுதலும், பின்னிக் கொள்வதும், பிரித்துவிட்டுக் கொள்ளலும், சந்திரபிறை, சூரிய பிறை போன்ற அணிகலன்களும், பூச்சூடிக் கொள்ளலும், அதை நாடிச் சுரும்பினங்கள் நெருங்குதலும் அப்போதைக்கப்போது ஏற்பட்டு நீங்கும் சிறப்புகளாகும். பாண்டியனால் நுகரப்பட்டு இறையனாரால் கூறப்பட்ட இயற்கைமணம் பெறுவதற்கரிய தங்கச்சிலை போன்ற பெண்களின் வனப்பிற்கு வனப்பாகும் என்றவாறு.
இந்நூற்பாவில் கருமை, நீட்சி, வாசனை ஆகிய மூன்றும் மகளிரின் கூந்தலுக்கு இயற்கை வனப்புகள் என்பதுவும், கொண்டை, பின்னல் போன்ற தலையலங்காரம், அணிகலன், மலர், வண்டுமூசல் ஆகியன செயற்கைப் புனைவுகள் என்பதுவும் எடுத்துக்காட்டப்பட்டன.
வண்டுகள் கூந்தலுக்காக வாராமல் மலர்களுக்காகவே வருதலின் மலரொடு வண்டு என ஒடுக்கொடுத்தார். “கொங்கு தேர் வாழ்க்கை” என்னும் குறுந்தொகை இரண்டாம் பாடல் பற்றிய திருவிளையாடற்புராண வரலாறு இதில் இடம்பெற்றது. இவ் வாசிரியர் உத்தமசாதி மகளிரின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டு என்ற கொள்கையர் என்பது இதனால் தெரிகிறது.
பிறை முதற் பணிகள் என்றது சூரிய பிறை, சந்திர பிறை, திருகுப்பூ, தெய்வவுத்தி முதலிய தலைக்கோலத்திற்குரிய அணிகலன்களை.
(283)
7.அருமகள் நெற்றியில் அம்பொற் சுட்டியும்
 பட்டமும் திலகம் ஆதியும் பனித்துளி
 அன்ன வேர்வையும் அகன்றுவந்து ஒன்றுப;
 அகலமும், கவிழ்பிறை அன்ன தோற்றமும்
 இயல்பின வாகி இயங்குறும் அன்றே.
பெறுதற்கரிய மங்கையின் நுதலில் அழகிய பொன்னாலாகிய சுட்டியும், நெற்றிப்பட்டமும், குங்குமப்பொட்டு முதலிய திலக வகைகளும், பனித்துளிகளைப் போன்று குறுவேர்வரும்பலும்