| புறத்துஉள ஐவகைப் பூதம் அவிர்தலின் | | | அவற்றையும் பொதுஎன்று அறைவது முறையே. |
| | உடலின் கண் உள்ள எலும்பு, உதிரம், பசி, மூச்சு, மனம் ஆகியவையும் மற்றவைகளும் ஆகி வெளியில் உள்ள நிலம் முதலிய ஐம்பெரும் பூதங்களே விளங்குவதால் இவ் வைவகைப் பூதங்களையும் அகம், புறம் என்னும் இரண்டிற்கும் பொது வானவை என்று கூறலே தகுதியாம் என்றவாறு. | | நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பன ஐம்பெரும் பூதங்கள். இவற்றின் கூறுகளாகவே உடலின் தாதுக்கள் முதலியவைகள் இருத்தலை, “தோல் எலும்பு நரம்புதசை மயிர்என்று ஐந்தும் சொல்லரிய பிருதுவியின் கூறுஅது ஆகும்; ஓலம்மிகும் அப்புவின்கூறு ஐந்துஅது ஆகும்; ஓடும்நீ ருடன்உதிரம் மூளை மச்சை மேல் அமரும் சுக்கிலம்ஆம் என்று கூறும்; மேவியஆ காரமும்நித் திரைகள் தாமும் சீலமிகும் பயமுடன்மைதுனமும் சோம்பும் தேயுவின்கூறு என்றுஉலகம் செப்பும் காணே”. “ஓடல் நடந்திடல் இருத்தல் கிடத்தல் தத்தல் ஓதரிய வாயுவின்கூறு அறைந்த தாகும்; நாடரிய குரோதம்மிகு லோபம் மோகம் நண்ணும்மத மாச்சரியம் ஐந்து தாமும் நீடியவா காயத்தின் கூறுஅது ஆகும்”1 என்பதால் அறியலாம். | | ஐம்பூதங்கள் தனித்தனியே அண்டவெளியில் இருக்கும் போது தமக்கென்ற சில தன்மைகளைப் பெற்றுள்ளன. இவற்றின் கூறே உடலின் தோல்எலும்பு முதலியனவாக விளங்கும்போது வேறுவகையான சில தன்மைகளைப் பெற்று விடுகின்றன. இவ்வாறு ஐம்பூதங்களின் இயல்புகள் தம் நிலைக் கேற்ப மாறுபடுகின்றன. தோல். எலும்பு முதலியவற்றிற்குக் கூறப்படும் இலக்கணம் நிலமாகிய பெரும்பூதத்தின் தடத்த லட்சணமாகவே கொள்ளப்படும். | | உடலை ஒரு பிண்டமாக வைத்து ஐம்பூதங்களை நோக்க அவை அண்டத்தைச் சேர்ந்த புறப்பொருளாகவும், அவ்வுட | |
|
|