பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்267
10.கனிச்சீர் இரட்டிய ஓர்அடி உடைத்தாய்
 மோனையும் எதுகையும் ஆசிரி யப்பா
 முறையில் கொடுநடந்து ஈர்அசைத் தனிச்சொல்
 காட்டிப் பின்நிலை மண்டில அகவற்
 கடையடி இரண்டும் கவின்தரல் வஞ்சிப்
 பாஎனல் பல்லோர் பகர்ந்த முறையே.
இரு கனிச்சீர்கள் இணைந்தது ஓர் அடியாய், அகவலைப் போன்றே எதுகை, மோனைகளைப் பெற்றுச் சில அடிகள் சென்றபிறகு ஈரசையாலாகிய ஒரு தனிச்சொல்லையும் நிலை மண்டில ஆசிரியப்பாவின் இறுதி இரண்டு அடிகளையும் பெற்று முடிவதை வஞ்சிப்பா என்பது மரபு என்றவாறு,
இவர் நிலைமண்டிலம் என்பது பிறர் கூறும் நேரிசையை, குறளடி வஞ்சிப்பாவில் ஒரு தனிச்சொல், ஒரு முச்சீர் அடி, ஒரு நாற்சீரடி எனவே முடியும் என்று இங்கு கூறப்பட்டது, இவ்வாறு கூறினாலும் தனிச்சொல் இன்மை, அதிக ஆசிரிய அடிகள் பெற்றுவருதல் என்னும் இரண்டும் அடுத்த நூற்பாவில் தழுவிக்கொள்ளப்படுகின்றன. இதே இலக்கணத்துடன் அமைந்ததற்கு எடுத்துக்காடடு;-
மன்னவர்முதற் பொன்னுடையவர்
தம்மெதிர்தினம் எம்மதுமனம்
ஒல்குறுந்துயர் நல்குபுன்மயல்
ஆவதுமுன் தேவலதெனில்
நல்லதுமறைச் சொல்லருள்நிறைவு
என்கைமெய்ப்படா நின்கழற்கொடாய்
பேசவாயிலன் நாசமில்புகழ்
மரீஇய
சென்னையம் பதியிற் சிறந்து
தன்னைநா டினர்க்குத் தருமுரு கோனே.1