நேரிசை வெண்பா |
| 19. | சவலைவெண் பாவின்முற் பகுதியின் ஈற்றில்அவ் | | | வெதுகைத் தனிச்சொல்ஒன்று இசைவுறில் நேரிசை | | | வெண்பா ஆம்னெ நிகழ்த்திடல் மிகையே. |
|
| முற்கூறப்பட்ட சவலை வெண்பாவின் முதல் குறளை யடுத்து முதல்ஈரடிகட்கு எதுகையாயமையும்படி (வெண்டளை பிறழாமல்) ஒரு தனிச்சொல் சேர்ந்துள்ள பா நேரிசைவெண்பா ஆகும் என்றவாறு, |
| வெண்பா வகைகளிலேயே இதுவே மிக்குப் பயில்வதாதலின் இதனை அனைவரும் அறிவர் எனக் குறிக்க நிகழ்த்திடல் மிகையே என்றார். நூற்பாவில் இல்லாவிடினும் வெண்பா ஒன்றுமட்டுமே பிறதளைக் கலப்பின்றி வருவதாதலின் உரையில் அது சேர்த்துக் கொள்ளப்பட்டது. (418) |
இன்னிசை வெண்பா |
|
| 20. | மூன்றுஅடி நன்னாற் சீரின வாகி | | | ஈற்றடி முச்சீர் ஆக இயற்றிடல் | | | இன்னிசை வெண்பா என்பது முறையே. |
|
| முதல் மூன்று அடிகளும் நன்னான்கு சீர்களை உடையன வாகியும் நான்காவதாகிய இறுதிபடி முச்சீரானியன்றதாகியும் அமைந்த பா இன்னிசை வெண்பா எனப்படும் என்றவாறு, |
| இங்கு வருகின்ற சீர்கள் வெண்பாவிற்கே உரிய சீர்கள் என்பதும் ஈற்றடியின் இறுத்திச்சீர் நாள், மலர், காசு, பிறப்புகளில் ஒன்று என்பதும் வெண்பாபற்றிய அதிகாரத்தால் பெற்றதாம், இதில் எதுகை பற்றிக் கூறப்படாமையின் ஒருவிகற்பம். இரு விகற்பம் இரண்டும் கொள்க. சிறு பான்மை (தொன்மையான நூல்களில்) பலவிகற்பமும் இடம்பெறும். |