| முடிவுஇயல்பு இடைவர மொழியார்; அவர்தம் | | | வெண்பா வியற்கை விரித்திடற்கு அரிது; அதன் | | | ஈற்றடி மோனை எழில்இசைவு இவற்றால் | | | தண்ணுமை போலத் தயங்கு மன்றே. |
| | தனிக் குற்றெழுத்தை ஓர் அசையாக அலகிடுதல் சீரின் ஈற்றில் வருமன்றி முதலிலோ இடையிலோ வாராதென்பதும், குற்றியலிகரத்தைத் தளைநோக்கி அலகிடுதல் விடுதல் ஆகிய இரு நிலைகளையும், இவை போன்ற மற்றவற்றையும் உணர்ந்து கொள்ள வல்லவர்கள் (“குறள்வெண்பா இரண்டணைவது சவலை;” என்பது முதல் “நேரிசை வெண்பா வேணமட்டடுக்கி” என்பது வரை”) யாம் அடுக்கி கூறிய நெறி பற்றி ஈற்றுச் சீர் இடையே வரும்படி பாடமாட்டார்கள், வெண்பாவின் இலக்கணத்தை நன்கு உணர்ந்து இயற்றுபவர்களால் யாக்கப்பெறும் அப் பாவின் சிறப்பை விரித்துக் கூற இயலாது. நன்றாகப் புனையப்பெற்ற வெண்பாவின் இறுதி அடி மோனைநயம் சொற்பொருத்தம் ஆகியவைகளால் மிருதங்கத்தின் தீர்மானம் போலக் கம்பீரமாக முடியும் என்றவாறு, | | “அகர முதல எழுத்தெல்லா மாதி பகவன் முதற்றே உலகு” என்ற குறளின் முதற் சீரை எடுத்துக் கொள்வோம். இதை அலகிடும் போது நிரை, நேர் என அலகிட்டுப் புளிமாச் சீர்என வேண்டும், அவ்வாறன்றி நேர், நேர் நேர் எனக்கொண்டு தேமாங்காய் ஆக்கலும் நேர், நிரை என நிறுத்திக் கூவிளம் ஆக்கலும் பிழையாம், “குறிப்பே ஏவல் தற்சுட்டு அல்வழித் தனிக்குறில் மொழி முதல் தனியசை இலவே”1 என்பது விதி. | | “தளை சீர் வண்ணம் தாம்கெட வரினே குறுகிய இகரமும் குற்றிய லுகரமும் அளபெடை ஆவியும் அலகியல் பிலவே”2 ஆதலின் அவை இடம் நோக்கிக் கொள்ளவோ தள்ளவோ படும். “அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் தினல்”3 என்னும் குறளில் தியாவிலுள்ள | |
|
|