| வள்ளியையும் மணந்தார், இவ்வாறு இருவரை மணந்ததால் அவருடைய தூயன் குரவன் தொழுகடவுள் என்ற பெருமைக்குப் பழுது நேர்ந்து விடவில்லை என்கிறாள் மூன்றாமவள். இது இருபொருள் பயந்த ஈற்றுப்பகுதி. |
| வஞ்சமெல்லாந் தீர்க்கும் மயிலமலை வாழ்முருகோன் |
| கஞ்சன்அரி ஈசனுக்குக் கண்டனன்காண் அம்மானை; |
| கஞ்சன் அரி ஈசனுக்குக் கண்டனனே ஆமாயின் |
| கொஞ்சம் கருமங்கை கொண்டதேன் அம்மானை? |
| கொண்ட தமரக் குலத்தினரால் அமமானை,1 |
| இவ்வம்மானையின் முற்பகுதியிலேயே கண்டனன் என்ற சொல் முப்பொருள் தரும் பிரிமொழிச் சிலேடை, கஞ்சனுக்கு அவனைக் குட்டிக் கண்டனம் செய்த கண்டனன்; அரிக்குக் கற்கண்டு போல் இனிமைதருகின்ற கண்டு அனன்; ஈசனுக்குக் கண்ணிலிருந்து வந்த செல்வமாகிய கண்தனன், இது முதல் மகள் கூற்று. |
| பிற்பகுதியில் “கொஞ்சங்கருமங்கைகொண்டதேன்” என்ற வினாவும் “கொண்டதமரக் குலத்தினரால்” என்ற விடையும் இருபொழிச் சிலேடைகள், கொஞ்சம் கருமம் (சூரனுடன் போர் புரிதலாகிய வினை) கை கொண்டது அமரக் குலத்தினரால் (தேவர்களை வாழ்விக்க) என ஒரு பொருளும் கொஞ்சு அம் கரு மங்கை (கரிய வள்ளி) கை கொண்டது அம் மறக்குலத்தினரால் (குறிஞ்சி மக்கள் குலதெய்வமாக வழிபடுதலால்) எனப் பிறிதொரு பொருளும் காண்க. இது இரு பொருள், முப்பொருள் இணைந்து வந்தது, |
| என்றற் கனைமுதலாம் ஈரிரண்டு தாயகமும் |
| குன்றக் குடியிற் குருபரனே அம்மானை; |
| குனறக் குடியிற் குருபரனே ஆமாயின் |
|