பக்கம் எண் :
 
அறுவகையிலக்கணம்377
இவர் உபமான சங்கிரகம், இரத்தினச் சுருக்கம் ஆகிய நூல்களைப் போன்று இந்தஇந்தப் பொருளுக்கு இன்னின்னவை உவமையாகும் என்று கூறித் தமிழ் இலக்கிய உவமை மரபைக் காட்டுகிறார். இந்நூலில் பொருளிலக்கணத்தில் அகப்பொருளைப் பற்றிக் கூறுங்கால் உறுப்பியல்பில் முன்னரே சில உவமைகள் கூறப் பெற்றன. இங்கேயும் அம்முறையிலேயே கூறப்படுகின்றன.
இவ்வாறு தமிழ் இலக்கிய உலகில் தொன்றுதொட்டுப் பயிலப்பெற்றுவரும் உவமைகளை எடுத்துக்காட்டினாலும் இவைகளைத்தாம் கூறவேண்டும்; வேறு கூறினால் வழுவாகும் என்று சொல்லவில்லை. மாறாக, “பொருந்தக் கூறிய புத்துவமைச்சொல் தழுவும்நா வலரும் தமராம் எமக்கே”1 என இவ்வியல்பின் இறுதியில் கூறுகிறார்.
3.செம்பொற் குன்றமும், செக்கரும், கனலும்,
 மாணிக்கம் ஆதியும் மயிலோன், விடையோன்
 கணபதி முதலினர் காட்சிக்கு இணையே.
செம்பொன்னால் ஆகிய குன்றும், மாலைக்கால வானமும், தீயும், மாணிக்கக் கல்லும், இவை போன்ற நல்ல செம்மையான பிற பொருள்களும் முருகப்பெருமான், சிவபெருமான், விநாயகர் போன்றோர் தோற்றத்திற்கு உவமைகளாகும் என்றவாறு.
(536)
4.கடலும், மேகமும், கரியமால் வரையும்
 இரவும், மைக் குழம்பும் இனையன யாவும்
 நெடியோன், உமை, எமன், இந்திரன், வள்ளி,
 அவுணர்க்கு இணைஎன்று அறைவது வழக்கே.
சமுத்திரம், வான்முகில், கருநிறங்கொண்ட பெரிய மலை, நள்ளிரவு, கரிய மைக்குழம்பு ஆகியவற்றையும் இவை போன்ற சிறந்த கருமை பெற்ற பொருள்களையும் திருமால், பார்வதி