பக்கம் எண் :
 
புலமையிலக்கணம்440
இவ்வாறு தெளிவான அறிவைப் பெறுவதற்குரிய வழி முறைகள் இப்பிரிவில் கூறப்படுவதால் இது தேற்ற இயல்பு எனப்பட்டது. இப்பிரிவு 31 நூற்பாக்களை உடையது. இதன் தலைச்சூத்திரம் தேற்றம் என்பதனை விளக்குவதுடன் இவ்வியல்பை முதலில் வைத்ததற்கான காரணத்தையும் கூறுகிறது.
4.தேற்றம் என்பது புலவன் ஆம்ஆறு;
 ஆதலின் அம்முறை முதற்கூ றுதுமே.
தேற்றம் என்பது ஒருவன் புலமையுடையவனாக ஆவதற்குரிய வழி ஆகும். இக் காரணத்தால் அறிவுத் தெளிவைப் பெறுவதற்குரிய வழியை முதற்கண் சொல்வாம் என்றவாறு.
அறிவில் மயக்கமற்ற தெளிவே புலமை. அதனை உடையவரே புலவர். எனவே தெளிவுபெறலே புலவனாதலாம். இது தான் இச்சூத்திரத்தில் விளக்கப்பட்டது. இதுவே அடிப்படை யாதலால் இது இவ்விலக்கணத்தின் முதலில் வைக்கப்பட்டது என முறைவைப்பிற்கும் காரணம் கூறுகிறார்.
(646)
5.புலமையின் ஆசை பொலிந்தோன் ஒருவன்
 அத்தொழிற் பெரியோர்க்கு ஆட்படல் நலமே.
புலமை பெறவேண்டும் என்னும் பெருவிருப்புடையவன் பெரும்புலமை பெற்றுள்ள அறிஞர்களைப் பணிந்தொழுகுதல் சிறப்பாகும் என்றவாறு.
பெரியோர்க்கு ஆட்படல் என்பதை நன்னூல், “பொழுதொடு சென்று வழிபடன் முனியான் குணத்தொடு பழகி அவன்குறிப் பிற்சார்ந்து , இருஎன இருந்து சொல்எனச் சொல்லிப் பருகுவன் அன்ன ஆர்வத்த னாகிச் சித்திரப் பாவையின் அத்தக அடங்கிச் செவிவா யாக நெஞ்சு களனாகக் கேட்டவை கேட்டவை விடாது உளத்து அமைத்துப் போ எனப் போதல் என்மனார் புலவர்”1 என்றும், “அழலின் நீங்கான் அணுகான் அஞ்சி நிழலின் நீங்கான் நிறைந்த நெஞ்சமோடு